7,050mAh பேட்டரியுடன் சத்தமில்லாமல் புதிய போனை அறிமுகம் செய்த Vivo எந்த மாடல் பாருங்க

HIGHLIGHTS

Vivo இன்று இந்தியாவில் அதன் புதிய Vivo T5 5G போனை அறிமுகம் செய்துள்ளது

Vivo T5 5G போனின் 6GBரேம் மற்றும் 128GB கொண்ட அடிப்படை விலை ரூ,34,999க்கு ஆரம்பமாகிறது

இந்த போனின் விற்பனையானது செப்டம்பர் 9 அன்று பிளிப்கார்டில் நடைபெறும்

Vivo இன்று இந்தியாவில் அதன் புதிய Vivo T5 5G போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 50MP OIS மெயின் கேமரா உடன் இதில் 8MP அல்ட்ர வைட் கேமரா உடன் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 7050Mah பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அம்சங்களின் தகவல் பார்க்கலாம் வாங்க.

Vivo T5 5G சிறப்பம்சம்.

Vivo T5 5G போனில் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.83-இன்ச் 1.5K (1,260 x 2,800 பிக்சல்)3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரெட் உடன் இதில் 2,000 நித்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது மற்றும் இதில் HDR10+ சப்போர்ட் வழங்குகிறது.

மிக சிறந்த பர்போமன்சுக்கு இந்த போனில் ஒகட்டா கோர் MediaTek Dimensity 7500 டர்போ சிப்செட் உடன் வருகிறது மேலும் இந்த போன OriginOS 6 கீழ் Android 16 அடிபடையின் கீழ் அப்க்ரேட் செய்யப்படுகிறது, மேலும் இந்த போனில் மூன்று ஆண்டு OS அப்க்ரேட் மற்றும் ஐந்து ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, விவோ T5 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் சோனி IMX882 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் (f/1.79) ப்ரைமரி கேமராவும், அதனுடன் 8-மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32-மெகாபிக்சல் (f/2.0) முன்புற கேமராவும் உள்ளது. விவோ T5 5G ஆனது 4K வரை வீடியோக்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டது.

விவோ T5 5G, 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,050mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஃபோன் கனெக்ஷன் வசதிக்காக 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, ஒரு USB டைப்-C போர்ட், GPS, BeiDou, GLONASS, Galileo, NavIC மற்றும் QZSS ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது பாதுகாப்புக்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவை அடங்கும். இதன் பரிமாணங்கள் 164.42×75.25×7.99mm மற்றும் இதன் எடை சுமார் 199g ஆகும்.

இதையும் படிங்க:போட்டான் பாரு ஒரே போடு Vivo புதிய போன் அறிமுகம் செய்யும் குஷியில் இந்த மாடலுக்கு அதிரடி டிஸ்கவுண்ட்

Vivo T5 5G விலை தகவல்

Vivo T5 5G போனின் 6GBரேம் மற்றும் 128GB கொண்ட அடிப்படை விலை ரூ,34,999க்கு ஆரம்பமாகிறது அதுவே இதன் ஹை எண்டு மாடல்களான 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,39,999 மற்றும் ரூ,44,999 ஆகா வைக்கப்பட்டுள்ளது கடைசியாக 2GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,49,999 ஆகா வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் விற்பனையானது செப்டம்பர் 9 அன்று பிளிப்கார்ட் மற்றும் மற்றும் அதன் அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து வாங்கலாம், மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் Axis Bank, SBI, மற்றும் HDFC பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், இதில் நீங்கள் ரூ,4,000 டிஸ்கவுன்ட் பெறலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :