Vivo யின் இந்த போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட், இங்கிருந்து வாங்கினால் பல நன்மை கிடைக்கும்

Vivo யின் இந்த போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட், இங்கிருந்து வாங்கினால் பல நன்மை கிடைக்கும்

நீங்கள் ஒரு 15000ரூபாய் விலையில் ஒரு புதிய போன் வாங்க நினைத்தாள், நீங்கள் புதிய Vivo யின் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்க இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும், Vivo T4x 5G ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். தற்போது, ​​இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் Vivo T4x 5Gயில் சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. Vivo T4x 5G யில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் ஆபர் தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Vivo T4x 5G விலை மற்றும் ஆபர் தகவல்

விவோ டி4எக்ஸ் 5ஜியின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் பிளிப்கார்ட்டில் ரூ.13,999 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபர் சலுகையைப் பற்றி பேசுகையில், HDFC பேங்க் அல்லது Axis வங்கி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.12,999 ஆக இருக்கும். உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை ஈடாகக் கொடுத்து விலையை ரூ.8,450 குறைக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ச்செஞ்சின் இந்த போனில் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது.

Vivo T4x 5G சிறப்பம்சம்.

Vivo T4x 5G, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1050 nits உச்ச பிரகாசத்துடன் 6.72-இன்ச் FullHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் MediaTek Dimensity 7300 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட FuntouchOS 15 இல் இயங்குகிறது. பாதுகாப்பிற்காக, தொலைபேசியின் பக்கத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. பரிமாணங்களைப் பொறுத்தவரை, தொலைபேசி 165.7 மிமீ நீளம், 76.3 மிமீ அகலம், 8.09 மிமீ தடிமன் மற்றும் 208 கிராம் எடை கொண்டது.

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், T4x 5G இன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் பாதுகாப்பதற்காக IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. T4x 5G ஆனது 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G VoLTE, Wi-Fi 6, புளூடூத் 5.4, GPS, GLONASS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க:வேற லெவல் டிஸ்கவுண்ட் iPhone 16 Pro போனில் அதிரடியாக ரூ,9,500 டிஸ்கவுண்ட் எங்கு எப்படி வாங்கலாம் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo