Vivo S5 32MP கேமராவுடன் பன்ச் ஹோல் கேமரா மற்றும் நான்கு பின்கேமரா உடன் அறிமுகம்.

Vivo S5 32MP  கேமராவுடன்  பன்ச் ஹோல் கேமரா மற்றும் நான்கு  பின்கேமரா உடன் அறிமுகம்.

விவோ நிறுவனத்தின் எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஸ்5 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா, ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2698 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 27,640) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 30,715) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Vivo S5 சிறப்பம்சங்கள்:

– 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
– 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஒ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, f/2.48
– 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4
– 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா, f/2.45
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

3டி கிளாஸ் பேக் கொண்டிருக்கும் எஸ்5 ஸ்மார்ட்போன் 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் விவோ ஃபிளாஷ் சார்ஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile