ViVo APEX 2020 இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் அறிமுகமானது.

ViVo APEX 2020  இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் அறிமுகமானது.
HIGHLIGHTS

புதிய மாடலிலும் எவ்வித போர்ட்களோ, பட்டன்களோ வழங்கப்படவில்லை. இதற்கு மாற்றாக பிரெஸ்-சென்சிட்டிவ் பட்டன்கள் இருபுறமும் வழங்கப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் தனது புதிய கான்செப்ட் போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.45 இன்ச் 120° ஃபுல் வியூ ராப்-அரவுண்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய மாடலிலும் எவ்வித போர்ட்களோ, பட்டன்களோ வழங்கப்படவில்லை. இதற்கு மாற்றாக பிரெஸ்-சென்சிட்டிவ் பட்டன்கள் இருபுறமும் வழங்கப்பட்டுள்ளது.

ViVo APEX  2020 சிறப்பம்சங்கள்:

– 6.45 இன்ச் 2330×1080 பிக்சல் FHD+ 120° ஃபுல் வியூ எட்ஜ்லெஸ் டிஸ்ப்ளே
– 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 12 ஜி.பி. LPDDR5 ரேம்
– 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– 16 எம்.பி. கேமரா, 5x-7.5x கன்டினுவஸ் ஆப்டிக்கல் சூம் பிளஸ் 48 எம்.பி. கிம்பல்
– 16 எம்.பி. இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா
– 5ஜி SA/NSA, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1, GPS/GLONASS
– 60 வாட் வயர்லெஸ் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்

இதில் விவோவின் மூன்றாம் தலைமுறை ஸ்கிரீன் சவுண்ட் கேஸ்டிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அபெக்ஸ் 2020 போனில் இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது தேவையான சமயத்தில் மட்டும் டிஸ்ப்ளேவில் தோன்றும். இதன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா சூப்பர் பிச்சல் போட்டோசென்சிட்டிவ் சிப் கொண்டிருக்கிறது. இதனால் புகைப்படத்தின் தரம் பாதிக்கப்படாது.

இதன் பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா, கிம்பல் போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது சீரான ஆப்டிக்கல் ஸ்டேபிலைசேஷன் வழங்குகிறது. இது வழக்கமாக OIS கொண்ட ஸ்மார்ட்போன்களை விட 200 சதவீதம் வரை துல்லியமாக ஸ்டேபிலைஸ் செய்யும் என விவோ தெரிவித்துள்ளது. இத்துடன் பல்வேறு கேமரா அம்சங்கள் வழங்கப்படுகிறது.

விவோ அபெக்ஸ் 2020 ஸ்மார்ட்போன் வைட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இது வெறும் கான்செப்ட் என்பதால், இதிலுள்ள சில அம்சங்கள் அடுத்த தலைமுறை நெக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo