MWC SHANGHAI: VIVO IQOO 5G ஸ்மார்ட்போன் உடன் VIVO AR GLASS அறிமுகம்.

MWC SHANGHAI: VIVO IQOO 5G ஸ்மார்ட்போன் உடன்  VIVO AR GLASS அறிமுகம்.
HIGHLIGHTS

VIVO AR GLASS, 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் பிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், ஜொவி 2.0 உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.

5ஜி நெட்வொர்க் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் சார்ந்து விவோ பல்வேறு 5ஜி செயலிகளை அறிமுகம் செய்தது

SHANGHAI நகரில் நடைபெறும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ தனது அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தது.  விவோவின் புதிய AR (ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி) VIVO AR GLASS, 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் பிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், ஜொவி 2.0 உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. 

 VIVO AR GLASS 

விவோ தனது AR  கண்ணாடிகளை முதலில் அறிமுகம் செய்தது. இதில் டூயல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, யுனிட்டி பிளஸ் 3DoF டெஸ்க்டாப் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு முப்பறிமான முறையில் சீன்களை உருவாக்கி அவற்றை பல்வேறு இன்டராக்டிவ் செயலிகளில் டிஸ்ப்ளே செய்யலாம். டூயல் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் இருப்பதால், டேட்டா கேபிளை ஐகூ 5ஜி ஸ்மார்ட்போனுடன் இணைத்து விட்டால், கண்ணாடிகள் தரவுகளை டிஸ்ப்ளே செய்யும். இதில் மொபைல் போன் செயலிகளை தேர்வு செய்யும் அங்கமாக செயல்படுகிறது.

விவோ AR கண்ணாடிகள் தரவுகளை ப்ரோஜெக்ட் செய்யும் போது 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டு செயலிகளை செலக்ட் செய்யலாம். முதற்கட்டமாக AR  ரெயிட் கேம்,AR. மொபைல் ஆஃபிஸ் சிஸ்டம்AR  5ஜி தியேட்டர் போன்று செய்யப்பட்ட பிரிவுகளில் கிடைக்கும் செயலிகளை மட்டும் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது

Vivo IQOO 5ஜி ஸ்மார்ட்போன்

 5ஜி நெட்வொர்க் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் சார்ந்து விவோ பல்வேறு 5ஜி செயலிகளை அறிமுகம் செய்தது. இவற்றில் 5ஜி கிளவுட் கேம், 5ஜி ஸ்கிரீன் மிரரிங் மற்றும் 5ஜி ஈசி ஷேர் உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன. விவோ நெக்ஸ் எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை தொடர்ந்து விவோ தனது வர்த்தக ரீதியிலான முதல் 5ஜி ஸ்மார்ட்போனான ஐகூ 5ஜி இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

விவோ சூப்பர் ஃபிளாஷ்சார்ஜ் 120வாட்

விவோ தனது சூப்பர் ஃபிளாஷ்சார்ஜ் 120 வாட் அல்ட்ரா-ஹை பவர் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் யு.எஸ்.பி. டைப்-சி டேட்டா கேபிள் மற்றும் டிராவல் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் 4000 Mah . பேட்டரியை 0 முதல் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்களையும், முழுமையாக சார்ஜ் செய்ய 13 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.  

பாதுகாப்பை பொருத்தவரை சூப்பர்பிளாஷ் 120 வாட் சார்ஜரில் இரண்டடுக்கு பாதுகாப்பு IC . வழங்கப்பட்டுள்ளது. இது இருமடங்கு பாதுகாப்பை உறுதி செய்கிறது. இத்துடன் இது BMS  பவர் மீட்டர் சிப் பயன்படுத்தி பவர் டிடெக்‌ஷன் மற்றும் ப்ரோடெக்‌ஷனை நிர்வகிக்கிறது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. விவோவின் ஜொவி 2.0 சேவையில் ஐ.ஒ.டி. (IoT) மூலம் இயங்கும் ஜொவி ஐ.ஒ.டி. செயலி, விவோ ஸ்மார்ட்போன்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஜொவி 2.0 ஏ.ஐ. சேவையில் மொத்தம் 18 நிறுவனங்கள், 23 பிரிவுகளில் சுமார் 430 சாதனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo