12GB RAM உடன் வரும் ஸ்மார்ட்போன்கள் எத்தனை என உங்களுக்கு தெரியுமா

HIGHLIGHTS

2GB யில் வரும் ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்

12GB RAM உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்  எத்தனை என உங்களுக்கு  தெரியுமா

டெக்னோலிஜி  வளர்ச்சி  பல மடங்கு அதிகரித்துள்ளது ஒரு காலத்தில்  சாதாரண கேமரா போனை பயன்படுத்தி காலம்  போகி  தற்பொழுது  கேமராவில் பல புதிய விதமான  கேமரா வர ஆரம்பித்துள்ளது , அதை போன்று  தான் மற்றொரு வகை என்று பார்த்தால் 1GB , ரேம் லிருந்து  2GB, ,4GB, 6GB,  வரை பயன்படுத்தி வந்த  காலம் போகி 8GB  ரேம் வர ஆரம்பித்தது  இப்பொழுது  அதையும் தாண்டி  12GB  ரேம்  ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்டோரேஜ்  என்று பார்க்கும்பொழுது 512GB வரை ஸ்டோரேஜ்  வரை ஆரம்பித்துள்ளது, இன்று நாம்  அந்த வகையில்  12GB யில் வரும் ஸ்மார்ட்போன்கள்  பற்றி பார்ப்போம்  வாருங்கள் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

NUBIA RED MAGIC 3

Nubia வின் Nubia Red Magic 3 Gaming Phone இறுதியாக இந்தியாவிலும் அறிமுகமாகி விட்டது. இந்த கேமிங் போனில் ஒரு 5,000mAh  பேட்டரி  வழங்கப்பட்டுள்ளது இதை தவிர இதில் உங்களுக்கு 90Hz புது வித டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த போனில் ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது இதை தவிர இதில் பல ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன் இந்த போனில் ஒரு 30W பாஸ்ட் சார்ஜிங் டெக்னோலஜி வசதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் உங்களுக்கு கூலிங் டெக்னோலஜி டர்போ போன் உடன் கிடைக்கிறது.

ONEPLUS 7 PRO
புதிய OnePlus 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் 9.0 இயங்குதளம், பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர் மற்றும் சென் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சென் மோட் ஆக்டிவேட் செய்தால் அவசர அழைப்புகள் மற்றும் கேமரா மூலம் புகைப்படங்களை எடுக்க முடியும். மற்ற நோட்டிஃபிகேஷன்கள் எதுவும் வராது. இந்த அம்சம் 20 நிமிடங்களுக்கு இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது.

SAMSUNG GALAXY S10 PLUS

Samsung Galaxy S10+ ஒரு nanometre Exynos 9820 chipset மற்றும் 12GB RAM  உடன் வருகிறது  இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 1TB  இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 512GB  வரை அதிகரிக்கலாம். Galaxy S10+ Android 9.0 Pie out of the box  யில் வேலை செய்கிறது. மற்றும் இதில் 4,100mAh  உடன் வருகிறது இதனுடன் இதில் உங்களுக்கு   6.4 இன்ச் உடன் 1440 x 3040 pixels ரெஸலுசன் டிஸ்பிளே  வழங்கப்படுகிறது 

Samsung Galaxy S10+ யின் பின்புறத்தில் 12+12+16 மெகாபிக்சலின் ட்ரிப்பில் கேமரா  செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் ஒரு 12 மெகாபிக்ஸல் வைட்  என்கில்  சென்சார்  கொண்டுள்ளது இதனுடன் மற்றொன்றில் 12 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ சென்சார் இருக்கிறது. மற்றும் இதன் மூன்றாவது 16 மெகாபிக்ஸல்  அல்ட்ராவைட் சென்சார்  இருக்கிறது  மற்றும் இந்த சாதனத்தில் முன் புறத்தில் ஒரு  10+8  மெகாபிக்ஸல்  டூயல் கேமரா  கொண்டுள்ளது.

VIVO IQOO
Vivo வின்  சப் பிராண்ட்  IQOO  யின் முதல் போன் ஒரு ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கும் நிறுவனம் ஒரு  டீசர் யின் தகவலின் படி இந்த சாதனத்தில்;  குவல்கம் ஸ்னாப்ட்ரகன்855  ப்ரோசெசர் 12GBரேம் மற்றும்  256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது

இதில் ஒரு 6.41 இன்ச் OLED டிஸ்பிளே வாட்டர் ட்ரோப் நோட்ச் உடன் வழங்கப்படுகிறது மற்றும் இது ஒரு  ப்ளாக்ஷிப்  போனாக இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்ரின்ட்  சென்சார் வழங்கப்படவில்லை. இந்த கேமிங் போனில் உங்களுக்கு பிரஷர் சென்சிடிவ் பட்டன் லீக்கியூட்  கூலிங் டெக்னோலஜி வழங்கப்பட்டுள்ளது 

XIAOMI BLACK SHARK 2

புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR. வசதி, ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.இத்துடன் இன்-டிஸ்ப்ளே பிங்காரப்ரின்ட் சென்சார், சிக்னல் சீராக கிடைக்க X-வடிவத்தில் பிரத்யேக ஆண்டெனா வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆர்.ஜி.பி. லோகோ, டிஸ்ப்ளேவில் பிரெஸ் சென்சிட்டிவ் கண்ட்ரோல்கள், ஏ.ஐ. கேமிங் அனுபவம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 Mah . பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

LENOVO Z5 PRO GT

இதன் அம்சங்களை பொருத்த வரை 6.39 இன்ச் ஃபுல் HD பிளஸ் சூப்பர் AMOLED 19:5:9 எஸ்பெக்ட் டிஸ்ப்ளே, ஸ்லைடர் வடிவமைப்பு, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி.IR  ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட்  சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 16 எம்.பி. + 24 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சோனி சென்சார், 3350 Mah .பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.இதில் பயனர்களுக்கு 7nm Qualcomm chip  மற்றும் 12ஜிபி வகையில் இருக்கிறது. இதனுடன் லெனோவா  பிராண்ட் இந்த போனை  Android Pie யின் அடிப்படையில் Lenovo ZUI 10  யில் இயங்குகிறது.

கார்பன் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள லெனோவோ Z 5 ப்ரோ GT . ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகளில் ரெட் மற்றும் பிளாக் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. வெர்ஷனில் அதிகபட்சம் 50 ஆப்களை ஒரே நேரத்தில் திறக்க முடியும்.

LENOVO Z6 PRO

இந்த மொபைல் போனில் உங்களுக்கு 12GB ரேம் வரை வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் கூலிங் லிக்யூட்  இருக்கிறது.இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னெவென்றால் இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு குவாட் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது இதில் உங்களுக்கு லேயர் 3D கோட்டிங் வழங்கப்படுகிறது.மேலும் இதில் ஒரு 4000mAh பேட்டரி பவர் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதில் உங்களுக்கு 27W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வழங்குகிறது.இதன் மூலம் 15 நிமிடங்களில் 2 மணி நல்ல சார்ஜ் ஆகிவிடும்.

SAMSUNG GALAXY FOLD

சாம்சங்கின் இந்த போனில் 2000 டாலர் வரை விற்பனை செய்யப்படும்  Samsung Galaxy Fold யில் 4.7 இன்ச் யின் கவர் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மேலும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 7.3 டச் ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில்  ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் 12GB ரேம் மற்றும் 512GB  ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இந்தியாவில் இந்த போன் எக்சினோஸ்.ப்ரோசெசருடன் வருகிறது.மேலும் இதன் பின்புறத்தில் ஒரு  மூன்று கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது 12MP  வைட் என்கில்  லென்ஸ் 12MP அல்ட்ரா வைட்  ஏங்கிலும்  வழங்கப்பட்டுள்ளது.மற்றும் இதில் 16MP டெலிபோட்டோ  சென்சார்  வழங்கப்படுகிறது, இந்த போனின்  சந்தோசமான செய்தி  என்னவென்றால் 10MP + 8MP  இரட்டை முன் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo