ஸ்னாப்ட்ரகன் 630 ப்ரோசெசர் மற்றும் டூயல் கேமராவுடன் அறிமுகமானது Sony Xperia 8

ஸ்னாப்ட்ரகன் 630 ப்ரோசெசர் மற்றும் டூயல்  கேமராவுடன்  அறிமுகமானது Sony Xperia 8

சோனி மொபைல் நிறுவனம் எக்ஸ்பீரியா 8 ஸ்மார்ட்போனினை ஜப்பானில் அறிமுகம் செய்தது.  இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.இதில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:0 வைடு டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, ப்ரொடெக்சன் உடன் வருகிறது.

Sony Xperia 8 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2560×1080 பிக்சல் ஃபுல்HD . + 21:9 டிஸ்ப்ளே 
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
– அட்ரினோ 508 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, EIS
– 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா 2X ஆப்டிக்கல் சூம் லென்ஸ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
– யு.எஸ்.பி. டைப்-சி
– 2760 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜி்ங்

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா 2X ஆப்டிக்கல் சூம் லென்ஸ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எக்ஸ்பீரியா 8 ஸ்மார்ட்போனில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, கிளாஸ் பேக் மற்றும் 2760 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.

விலை தகவல் 

சோனி எக்ஸ்பீரியா 8 ஸ்மார்ட்போன் கிரே, பிளாக், ஆரஞ்சு, புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 505 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,840) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo