MWC 2019 பட்ஜெட் விலையில் சோனி Xperia 10 மற்றும் 10 plus இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.

MWC  2019 பட்ஜெட்  விலையில்  சோனி Xperia 10 மற்றும் 10 plus  இரு ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம்.
HIGHLIGHTS

WC 2019 விழாவில் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10 மற்றும் எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது

MWC  2019  விழாவில் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10 மற்றும் எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாக்‌ஷிப் எக்ஸ்பீரியா 1 மாடலை போன்று இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா 10 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் ஃபுல் HD. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
– ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
– 3 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/2.0
– 5 எம்.பி. கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு பை 
– 2870 Mah. பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட வைடு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, பேட்டரி, சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் ஃபுல் HD. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 12 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/1.75
– 8 எம்.பி. கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு பை 
– 3000 Mah. பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

விலை தகவல் 

சோனி எக்ஸ்பீரியா 10 ஸ்மார்ட்போன் பிளாக், நேவி புளு, பின்க் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,800) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, நேவி புளு, மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 429.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.30,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo