Sony Xperia 1 4K OLED ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் சோனியின் முதல் ட்ரிப்பில் கேமரா கொண்டுள்ளது

HIGHLIGHTS

சோனி மொபைல் நிறுவனம் தனது எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

Sony Xperia 1 4K OLED ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் சோனியின் முதல் ட்ரிப்பில் கேமரா கொண்டுள்ளது

சோனி மொபைல் நிறுவனம் தனது எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சோனியின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் 21:9 சினிமா வைடு 4K ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர், அட்ரினோ 640 கிராஃபிக்ஸ், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 26 எம்.எம். ஸ்டான்டர்டு லென்ஸ், 52 எம்.எம். லென்ஸ், 2X ஆப்டிக்கல் சூம் வழங்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா 1 சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 1644×3840 பிக்சல் 4K OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– சிங்கிள் / டூயல் சிம்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எக்ஸ்மார் RS சென்சார், 1/2.6″, f/1.6, ஹைப்ரிட் OIS/EIS, 1.4μm, பிரெடிக்டிவ் கேப்ச்சர்
– 12 எம்.பி. கேமரா, f/2.4,1/3.4″ 1.0μm 135° அல்ட்ரா வைடு-ஆங்கிள்
– 12 எம்.பி. கேமரா, f/2.4 aperture 1/3.4″ 1.0μm 45° டெலிபோட்டோ லென்ஸ், ஹைப்ரிட் OIS/EIS, 2x ஆப்டிக்கல் சூம்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/ 4″ எக்ஸ்மார் RS சென்சார், f/2.0, 1.12μm, 84° வைடு ஆங்கிள் லென்ஸ்
– யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், DSEE HX, LDAC, டால்பி அட்மாஸ்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP65/IP68)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– Qnovo அடாப்டிவ் சார்ஜிங் தொழில்நுட்பம்
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
– Qi வயர்லெஸ் சார்ஜிங்

இத்துடன் ஸ்மார்ட்போனில் Eye AF மற்றும் 10FPS AF/AE வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை எக்ஸ்பீரியா 1 இருக்கிறது. இதன் சினிமா ப்ரோ சினி ஆல்டா 21:9 தரத்தில் 4K ஹெச்.டி.ஆர். வீடியோக்களை படமாக்கும் திறன் கொண்டிருக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பிள், கிரே மற்றும் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 799 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.74,270) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo