கொரோனா வைரஸ் பாதிப்பு ஸ்மார்ட்போன்கள் விற்பனை கடும் பாதிப்பு.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 07 Apr 2020
கொரோனா வைரஸ் பாதிப்பு ஸ்மார்ட்போன்கள்  விற்பனை  கடும் பாதிப்பு.
Advertisements

IBM Developer Contest

Take the quiz to test your coding skills and stand a chance to win exciting vouchers and prizes upto Rs.10000

Click here to know more

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பெரும்பாலான துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்மார்ட்போன் சந்தை அதிகளவு பாதிப்பை சந்தித்து இருக்கிறது. சிசிஎஸ் இன்சைட் அறிக்கையின் படி ஸ்மார்ட்போன் சந்தை அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 126 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 25 கோடி யூனிட்கள் குறைவு ஆகும். அந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு என சிசிஎஸ் தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்களும் விநியோக பணிகளில் அதிக பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக வாடிக்கைாயளர்களால் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்மார்ட்போன் விநியோகம் 2020 இரண்டாவது காலாண்டில் 29 சதவீதம் வரை சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போன் விநியோகம் தொடர்புடைய இதர பணிகளும் ஆண்டு இறுதியில் பாதிப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் செலுத்த மாட்டார்கள். 2019 ஆண்டு விடுமுறை காலத்தில் விற்பனையானதை விட இந்த ஆண்டு விடுமுறை கால விற்பனை மூன்று சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மக்களின் பொருளாதார நெருக்கடி சூழலும் அவர்களை ஸ்மார்ட்போன்களை வாங்க விடாத நிலைக்கு தள்ளி இருக்கிறது. 

logo
Sakunthala

coooollllllllll

Tags:
Smartphone
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status