Samsung W20 புதிய போல்டபில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம், இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

Samsung W20 புதிய போல்டபில் 5G  ஸ்மார்ட்போன்  அறிமுகம், இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் W20 போல்டபில் ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய W20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட கேலக்ஸி ஃபோல்டு மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புதிய W20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் W20 சிறப்பம்சங்கள்:

– 7.3 இன்ச் 2152×1536 பிக்சல் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 டிஸ்ப்ளே
– 4.6 இன்ச் 720×1680 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்
– 675MHz அட்ரினோ 640 GPU
– 12 ஜி.பி. LPDDR4x ரேம்
– 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4-f/1.5, OIS
– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 45° FoV, f/2.4
– 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 10 எம்.பி. டூயல் பிக்சல் முன்புற கேமரா, f/1.9
– 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 90° FoV
– 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 5ஜி Sub6 / mmWave, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. 3.1
– 4,235 Mah . பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

இதனை மடிக்கும் போது 4.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 21:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 ஜி.பி. ரேம், இரட்டை முன்புற கேமரா, முன்புற கவரில் 10 எம்.பி. கேமரா, உள்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் நடுப்பகுதி சற்று கடினமாகவும், வெள்ளை நிற பேக் கவர் கொண்டிருக்கிறது. இத்துடன் இதன் பேட்டரி அளவிலும் மாற்றம் செய்யப்பட்டு 4235 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் W20 ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

சாம்சங் W20 ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் டிசம்பர் மாத வாக்கில் துவங்குகிறது. இதன் விலை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo