SAMSUNG M 10S விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

SAMSUNG M 10S  விலையில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எம்10எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

விலை மற்றும் விற்பனை 

சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் ஸ்டோன் புளு மற்றும் பியானோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைத்தளங்களில் துவங்குகிறது. 

SAMSUNG M 10S  சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884பி பிராசஸர்
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய கேலக்ஸி SAMSUNG M 10S  ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 பி ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது அல்ட்ரா வைடு சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo