சாம்சங் கேலக்சி M 10 மற்றும் M 20 விற்பனை மீண்டும் நாளை பகல் 12 மணிக்கு வருகிறது.

சாம்சங்  கேலக்சி M 10 மற்றும் M 20 விற்பனை  மீண்டும் நாளை பகல் 12 மணிக்கு  வருகிறது.
HIGHLIGHTS

இரண்டு ஸ்மார்ட்போன்களும் வைட்வைன் எல்1 சான்று பெற்றிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன்களில் ஹெச்.டி. வீடியோக்களை எவ்வித சிரமமும் இன்றி சீராக ஸ்டிரீம் செய்ய முடியும்

சாம்சங்  சமீபத்தில்  அதன் லேட்டஸ்ட்  Galaxy M10 மற்றும் Galaxy M20  கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து  இதன்  முதல்  விற்பனை நேற்று  நடந்தது  சேலுக்கு  வந்த சில நொடிகளில்  பல  ஸ்மார்ட்போன்களை  விற்று தீர்த்தது. இதனுடன் பல பேர்   இதை வாங்க முடியாமல்  போனது அதனை தொடர்ந்து நாளை மீண்டும் பகல் 12 மணிக்கு அமேசானில்  விற்பனைக்கு  வருகிறது.

கேலக்ஸி M20 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 ஆக்டா-கோர் 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது

இரண்டு ஸ்மார்ட்போன்களும் வைட்வைன் எல்1 சான்று பெற்றிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன்களில் ஹெச்.டி. வீடியோக்களை எவ்வித சிரமமும் இன்றி சீராக ஸ்டிரீம் செய்ய முடியும். புதிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5 யு.எக்ஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி M10 சிறப்பம்சங்கள்:

– 6.22 இன்ச் 1520×720 பிக்சல் HD .பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர்
– மாலி-G71 GPU
– 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– ஃபேஸ் அன்லாக்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3430 Mah . பேட்டரி

சாம்சங் கேலக்ஸி M 20 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD  பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
– மாலி-G71 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 Mah  பேட்டரி
– பாஸ்ட் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்கள் ஓசன் புளு மற்றும் சார்கோல் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

கேலக்ஸி M 20 ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்பரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. இரு ஸ்மார்ட்போன்களிலும் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9, 5 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்களில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ SD  கார்டு ஸ்லாட்கள் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் 3430 Mah . பேட்டரி கொண்டிருக்கிறது.

விலை மற்றும் ஆபர் 

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.7,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.10,990 என்றும் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆபர்  பற்றி பேசினால் இதனுடன்  இந்த ஸ்மார்ட்போனில்  ஏதாவது  டேமேஜ் ஏற்பட்டால் 699ருபாய் மதிப்புள்ள damage Protection  வழங்கப்படுகிறது. மேலும் இதில்  ஜியோ  கேலக்சி கிளப்  மூலம் 3110 சேமிப்பு  ஆபர் . மற்றும் டபுள் டாட்டா ஆபர் வழங்கப்படுகிறது. இதனுடன் 6 மதம் வரை நோ கோஸ்ட்  EMI  வசதியும்  வழங்கப்படுகிறது மேலும் கூடுதலாக  M சீரிஸ்  மொபைல்  கேஷ் கவரும்  வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo