Samsung Galaxy Z Flip இப்பொழுது மேலும் புது நிறத்தில் வந்தாச்சு.

Samsung Galaxy Z Flip இப்பொழுது  மேலும் புது நிறத்தில் வந்தாச்சு.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் மிரர் கோல்டு எனும் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் ஃப்ளிப் இதுவரை மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் நிறங்களில் மட்டும் விறப்னை செய்யப்பட்டு வந்தது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300×112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் Samsung Galaxy Z Flip ஸ்மார்ட்போன் விலை ரூ. 1,09,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சாம்சங் மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது. புதிய மிரர் கோல்டு ஃபினிஷ் வேரியண்ட் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன் பக்கவாட்டில் பிங்கர்ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 Mah . பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo