galaxy s26 fe
Samsung யின் Galaxy S26 சீரிஸின் புதிய ஸ்மார்ட்போன் Galaxy S26 FE உலகளவில் அறிமுகம் செய்தது. சாம்சங்கின் இந்த போன ப்ரீமியம் லுக் தருகிறது. இந்த போனில் Exynos 2500 சிப்செட் வழங்கப்படுகிறது.இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், சாம்சங்கின் Galaxy S26 வரிசையில் One UI 9 உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். Galaxy S26 FE மாடலானது கேமரா மற்றும் Galaxy AI ஆகியவற்றிற்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் விலை குறித்து இப்போது பார்க்கலாம்.
Samsung Galaxy S26 FE போனில் 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரகாசத்தை ஆதரிக்கிறது. இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் IP68 ரேட்டிங் உள்ளது, இது இதை நீர் புகாத தன்மையுடையதாக ஆக்குகிறது.
இந்த போனில் பர்போமன்சுக்கு எக்ஸினோஸ் 2500 சிப்செட் இடம்பெற்றுள்ளது. இந்த பிராசஸர் 3nm தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது 8GB ரேம் மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட OneUI 9-ல் இயங்குகிறது.மேலும்,
இதன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஃபோனில் 50MP ப்ரைம் OIS கேமரா, 12MP அல்ட்ரா-வைட் மற்றும் 8MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த சாம்சங் ஃபோனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12MP முன்புற கேமரா உள்ளது.
இந்த போன் 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய சக்திவாய்ந்த 4,900mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. கனெக்ஷன் வசதிக்காக, இந்த ஃபோனில் வைஃபை, ப்ளூடூத் மற்றும் NFC போன்ற அம்சங்கள் உள்ளன.
இதையும் படிங்க:முதல் முறையாக விற்பனைக்கு வரும் POCO வின் புது மாடல் கம்மி விலையில் வாங்கலாம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க
இந்த சாம்சங் ப்லக்ஷிப் போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி, 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி என மூன்று சேமிப்பு வகைகளில் வருகிறது. இதன் ஆரம்ப விலை 799 யூரோக்கள் (சுமார் ரூ. 89,000). மற்ற வகைகளின் விலை முறையே 899 யூரோக்கள் (சுமார் ரூ. 100,000) மற்றும் 1,099 யூரோக்கள் (சுமார் ரூ. 122,000) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட உலக சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி S26 FE, புளூபெர்ரி, கிராஃபைட் மற்றும் பிஸ்தாசியோ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.