Samsung இந்தியாவில் அதன் புதிய Samsung Galaxy S26 FE போனை அறிமுகம் செய்தது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஆகஸ்ட் 27 உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்தது, மேலும் இந்த Galaxy S26 FE போனில் 6.7 இன்ச் AMOLED 2X டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரெட் வழங்குகிறது மேலும் இந்த போனின் உலகளவிய அறிமுகத்திற்கும் இந்திய அறிமுகத்திற்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா என பார்க்கலாம் வாங்க.
சாம்சங் கேலக்ஸி S26 FE, 8GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டின் விலை இந்தியாவில் ரூ. 79,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிஸ்தா, புளூபெர்ரி மற்றும் கிராஃபைட் ஆகிய கலரில் தேர்வுகளில் கிடைக்கிறது.
மேலும் இந்த போனை வாங்கும்போது மிக சிறந்த சலுகை பெறலாம் மேலும் இந்த போனை பழைய போனுடன் எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் இந்த போனில் ரூ, 8,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்.இதை தவிர இந்த போனில் ரூ,3,000 அப்க்ரேட் 3,000 போனஸ் போன்ற சலுகை பெறலாம்.
Samsung Galaxy S26 FE அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,900 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் கூடிய 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எக்ஸினோஸ் 2500 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது 8GB ரேம் மற்றும் 256GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த போனில் இரட்டை சிம் (நானோ + நானோ) வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி S26 FE, ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 9-யில் இயங்குகிறது. இதற்கு ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படு
கேமராக்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி S26 FE-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் OIS வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் வைட் கேமரா, 123 டிகிரி வியூவ் எங்கில் உடன் கூடிய 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் OIS மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் வசதியுடன் கூடிய 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். மேலும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 12 மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது.
இதையும் படிங்க வெறும் ரூ,69,990 iPhone 17 Pro போனை அது எப்படி எங்கு என்பதை பார்க்கலாம் வாங்க
சாம்சங் கேலக்ஸி, 45W வயர்டு சார்ஜிங் சப்போர்டுடன் 4,900mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 45W அடாப்டரைப் பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் இந்த ஃபோனை 69 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது. இது 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது. இந்த ஃபோனின் டைமென்ஷன் 161.6 x 76.9 x 7.4 mm மற்றும் இதன் எடை 193 கிராம் ஆகும். மேலும், இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
இந்த ஃபோன் ஜெமினி ஓம்னியையும் சப்போர்ட் செய்கிறது , இதன் மூலம் கேலரியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி வீடியோ கிளிப்புகளை உருவாக்கவும் திருத்தவும் முடியும். இந்த போனில் உள்ள கனெக்ஷன் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct மற்றும் புளூடூத் 5.4 ஆகியவை அடங்கும்.