புது போனை அறிமுகம் செய்த குஷியில் Samsung Galaxy S25 Ultra 5G ஒரே அடியாக ரூ,44,451 டிஸ்கவுன்ட்

HIGHLIGHTS

Samsung Galaxy Z சீரிஸ் அறிமுகம் செய்த காரனத்தால் சாம்சங்கின் Galaxy S25 Ultra 5G போனின் விலை குறைப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி தற்போது ஃபிளிப்கார்ட்டில் ரூ,89,548-க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது

இந்த போன், ₹55,000 வரை குறைவான விலையில் கிடைக்கக்கூடும்.

புது போனை அறிமுகம் செய்த குஷியில் Samsung Galaxy S25 Ultra 5G ஒரே அடியாக ரூ,44,451 டிஸ்கவுன்ட்

நீங்கள் ஒரு ப்ரீமியம் ப்லாக்ஷிப் போனை வாங்க நினைத்தாள் இது தான் சரியான நேரம், என் என்றால் நேற்றும் Samsung Galaxy Z சீரிஸ் அறிமுகம் செய்த காரனத்தால் சாம்சங்கின் Galaxy S25 Ultra 5G போனின் விலை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வளம்ன்கப்படுகிறது இதன் முழு ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S25 Ultra 5G ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட்

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி தற்போது ஃபிளிப்கார்ட்டில் ரூ,89,548-க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களின் மூலம் ₹4,000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. இதை தவிர உங்களின் இந்த போனின் ஒரிஜினல் விலையோ ரூ,1,29,999ரூபாயாகும் அதிலிருந்து ரூ,44,451 பேங்க் ஆபர் உட்பட டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது மேலும், உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் விலையை மேலும் குறைக்கலாம்.

அறிக்கையின்படி, கேலக்ஸி S1 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு ₹10,000 வரை எக்ஸ்சேஞ் வேல்யூ கிடைக்கக்கூடும். உங்கள் போன் நல்ல நிலையில் இருந்தால், இந்த நன்மை இன்னும் அதிகமாக இருக்கலாம். அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திய பிறகு, கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் உண்மையான விலை ₹75,000-க்குக் கீழே குறையக்கூடும். இதன் மூலம், ₹1,29,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன், ₹55,000 வரை குறைவான விலையில் கிடைக்கக்கூடும்.

கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவை வாங்குவது இன்னமும் உகந்ததா?

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி S26 அல்ட்ராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புதிய பிராசஸர், மேம்படுத்தப்பட்ட கேலக்ஸி AI அம்சங்கள் மற்றும் கேமரா மேம்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இதன் காரணமாக கேலக்ஸி S25 அல்ட்ரா காலாவதியானது அல்லது பலவீனமானது என்று அர்த்தமல்ல. இன்றும்கூட, கேலக்ஸி S25 அல்ட்ரா பிரீமியம் ஃபிளாக்ஷிப் பிரிவில் ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாகக் கருதப்படுகிறது. அதன் செயல்திறன், கேமரா, டிஸ்ப்ளே மற்றும் மென்பொருள் அனுபவம் ஆகியவை பெரும்பாலான பயனர்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்கின்றன. உங்கள் பட்ஜெட் ₹100,000-க்குக் குறைவாக இருந்தால், இந்தச் சலுகை மிகவும் கவர்ச்சிகரமானதாக அமையக்கூடும்.

Samsung Galaxy S25 Ultra 5G சிறப்பம்சம்

Samsung Galaxy S25 Ultra 5G ஆனது 6.9-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 1400×3120 பிக்சல்கள் ரெசளுசன் , 120hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது. Galaxy S25 Ultra ஆனது 12GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 3.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் வழியாக 1TB வரை அதிகரிக்கலாம் .

இதையும் படிங்க நாம் மிகவும் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்த சாம்சங் Galaxy Z Fold8 மற்றும் Flip8 அறிமுகம் அம்சங்கள் பாருங்க

Galaxy S25 Ultra-வின் பின்புறம் 2x இன்-சென்சார் ஜூம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile