பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால், Samsung Galaxy S25 போனை இப்பொழுது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது அறிமுகத்தின்போது சுமார் ₹81,000 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த ஃபோனை, வங்கிச் சலுகைகள் மற்றும் கூப்பன்களுக்குப் பிறகு இப்போது சுமார் ரூ,50,000-க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
பிளிப்கார்ட்டில், சாம்சங் கேலக்ஸி S25-இன் 12GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹69,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான கூப்பன் மூலம் ரூ,16,499 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி அல்லது எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், கூடுதலாக ₹2,675 இன்ச்ட்டன்ட் டிசகவுண்டை பெறலாம். இதன் மூலம், இந்த போனின் உண்மையான விலை சுமார் ₹50,825 ஆகக் குறைகிறது.
12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட் ₹79,999 என விலை குறிப்பிடப்பட்டுள்ளது. ₹21,399 கூப்பன் மற்றும் ₹2,930 வரையிலான பேணக் டிஸ்கவுன்ட் உடன் , இந்த மாடலின் விலை தோராயமாக ₹55,670 ஆகக் குறைகிறது.
Samsung Galaxy S25 5G ஆனது 6.2-இன்ச் முழு HD பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 1,080×2,340 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. Galaxy S25 ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 7 பிளாட்பார்மில் இயங்குகிறது.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, Galaxy S25 இன் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் , OIS சப்போர்ட் மற்றும் 2x இன்-சென்சார் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 120-டிகிரி வியுவ் புலம் கொண்ட 10-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் , 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS சப்போர்டுடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S25 இரட்டை சிம் சப்போர்ட் , . கேலக்ஸி S25 146.9 mm, நீளம், 70.5 mm,அகலம், 7.2 mm, திக்னஸ் மற்றும் 162 கிராம் எடை கொண்டது. 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth 5.3, GPS, USB Type C port மற்றும் NFC ஆதரவு ஆகியவற்றை கொண்டுள்ள