Samsung Galaxy S20 மற்றும் S20 plus ஸ்மார்ட்போனின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.

Samsung Galaxy S20 மற்றும் S20 plus  ஸ்மார்ட்போனின்  விற்பனை ஆரம்பமாகியுள்ளது.
HIGHLIGHTS

புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் சாம்சங்கின் பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது

சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களில் முறையே 6.2/6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் கிளவுட் புளூ, காஸ்மிக் கிரே மற்றும் கிளவுட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் காஸ்மிக் கிரே, கிளவுட் புளூ, காஸ்மிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

இத்துடன் தேர்வு தெய்யப்பட்ட சந்தைகளுக்கு ஏற்ப ஸ்னாப்டிராகன் 865 மற்றும் எக்சைனோஸ் 990 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இவற்றின் 5ஜி மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் X55 / எக்சைனோஸ் மோடெம் 5123 வழங்கப்படுகிறது. இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– கேலக்ஸி எஸ்20 – 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200×1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே 
– கேலக்ஸி எஸ்20 பிளஸ் – 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200×1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே 
– ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU
– ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ARM மாலி-G77MP11 GPU
– கேலக்ஸி எஸ்20 – 8 ஜி.பி. / 12 ஜி.பி. (5ஜி) LPDDR5 ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 3.0)
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– கேலக்ஸி எஸ்20 பிளஸ் – 8 ஜி.பி. / 12 ஜி.பி. (5ஜி) LPDDR5 ரேம், 128 ஜி.பி. /256 (5ஜி) / 512 ஜி.பி. (5ஜி) மெமரி (UFS 3.0)
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, சூப்பர் ஸ்பீடு டூயல் பிக்சல் AF, OIS
– 64 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 76° FoV, f/2.0, OIS, ஹைப்ரிட் ஆப்டிக் சூம் 3X
– 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, f/2.2
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– ஏ.கே.ஜி. டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. 3.1
– கேலக்ஸி எஸ்20 – 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி / 3880 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வ.ர்லெஸ் பவர் ஷேர்
– கேலக்ஸி எஸ்20 பிளஸ் – 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி / 4370 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வ.ர்லெஸ் பவர் ஷேர்

புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் சாம்சங்கின் பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்20 மாடலில் 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரமைரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 64 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடலில் கூடுதலாக டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8K வீடியோ பதிவு செய்யும் வசதியும் இடம்பெற்று இருக்கிறது.

இத்தனை அம்சங்களை சக்தியூட்ட 4000 எம்.ஏ.ஹெச். மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo
Compare items
  • Water Purifier (0)
  • Vacuum Cleaner (0)
  • Air Purifter (0)
  • Microwave Ovens (0)
  • Chimney (0)
Compare
0