SAMSUNG GALAXY S20 மற்றும் GALAXY S20+ கிடைக்கிறது மிக சிறந்த கேஷ்பேக் சலுகை.

SAMSUNG GALAXY S20 மற்றும் GALAXY S20+ கிடைக்கிறது மிக சிறந்த கேஷ்பேக் சலுகை.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் சலுகை மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அப்கிரேடு போனஸ் சலுகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களை வாங்குவோர் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனினை தள்ளுபடி விலையில் வாங்கி கொள்ள முடியும்.

அப்கிரேடு போனஸ் சலுகையின் கீழ் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களை வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போனினை கொடுத்து அதிகபட்சம் ரூ. 5000 வரை தள்ளுபடி பெற முடியும்.  இதுதவிர கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்கள் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியிலும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 மாடல் 128 ஜி.பி. வெர்ஷன் ரூ. 66,999 விலையிலும், கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல் ரூ. 73,999 விலையிலும் துவங்குகிறது.

கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ரூ. 11,990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் இயர்பட்சை ரூ. 3,999 விலையில் வாங்கி கொள்ளலாம். இதுதவிர பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile