Samsung Galaxy S 10 Plus ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசர் உடன் அறிமுகம்.

Samsung Galaxy S 10 Plus ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசர் உடன் அறிமுகம்.
HIGHLIGHTS

புதிய சாம்சங் கேலக்ஸி S10 பிளஸ் ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் விலை 1000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.70,420) என வைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S10 பிளஸ் ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருப்பதையொட்டி சாம்சங் அங்கு புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.மேலும் இதில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

முன்னதாக 2018 ஆம் ஆண்டு கேலக்ஸி நோட் ஒலிம்பிக் எடிஷன், 2014-இல் கேலக்ஸி நோட் 3 ஒலிம்பிக் எடிஷன், 2016-இல் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஒலிம்பிக் எடிஷன், கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 8 விண்டர் ஒலிம்பிக் கேம்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்திருக்கிறது.

அதன் படி இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் கேலக்ஸி S10 பிளஸ் மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் டைனமிக் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இத்துடன் 12 எம்.பி. டூயல் பிக்சல் மற்றும் டூயல் அப்ரேச்சர் கொண்ட பிரைமரி கேமரா சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் டோக்யோ ஒலிம்பிக்ஸ் சின்னம் பேக் கவரில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரிசம் வைட் கலர் கொண்டிருக்கிறது. வழக்கமான கேலக்ஸி S 10 பிளஸ் மாடலை விட ஸ்பெஷல் எடிஷன் மாடலில் புதிய பேக்கேஜ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் விசேஷ வடிவைப்பு கொண்ட கேலக்ஸி பட்ஸ் இயர்போன்களும் வழங்கப்படுகிறது

புதிய சாம்சங் கேலக்ஸி S10 பிளஸ் ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் விலை 1000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.70,420) என வைக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo