Samsung Galaxy S10, S10 Plus மற்றும் Galaxy S10e மொபைல் போன் ட்ரிப்பில் கேமரா ம்,மற்றும் 12GB ரேம் உடன் அறிமுகம்

Samsung Galaxy S10, S10 Plus மற்றும் Galaxy S10e மொபைல் போன் ட்ரிப்பில் கேமரா ம்,மற்றும் 12GB ரேம் உடன் அறிமுகம்
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.  Galaxy S10, S10 Plus மற்றும் Galaxy S10e  என மூன்று ஸ்மார்ட்போன்களை சாம்சங் இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளது.

மூன்று கேலக்ஸி S10  ஸ்மார்ட்போன்களிலும் புதிய பன்ச்-ஹோல் ரக செல்ஃபி கேமராக்களை வழங்கி இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பிராசஸர், டைனமிக் AMOLED டிஸ்ப்ளேக்கள், HDR. 10 பிளஸ் சான்று, ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்டவை மூன்று மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

கேலக்ஸி S10 சிறப்பம்சங்கள்:

– 6.1 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
– 8 ஜி.பி. ரேம்
– 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 – f/2.4, OIS
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS
– 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
– 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
– 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. (இரு வேரியண்ட்கள்)
– இரு வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
– அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3400 Mah  பேட்டரி

கேலக்ஸி S 10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
– 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம்
– 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 – f/2.4, OIS
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS
– 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
– 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
– 8 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2
– 128 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. (மூன்று வேரியண்ட்கள்)
– மூன்று வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
– அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4100 Mah. பேட்டரி

கேலக்ஸி S 10E சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஃபிளாட் டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
– 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 – f/2.4, OIS
– 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
– 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
– 128 ஜி.பி., மற்றும் 512 ஜி.பி. (இரு வேரியண்ட்கள்)
– இரு வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஹோம் பட்டனில் கேபாசிட்டிவ் கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3100 Mah பேட்டரி

மற்ற அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 சீரிசில் வைபை 802.11ax, டால்பி அட்மோஸ், வேப்பர் சேம்பர் கூலிங் சி்ஸ்டம் (கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் மட்டும்), ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0, வயர்லெஸ் பவர்ஷேர் (மற்ற சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் போன்றே கேலக்ஸி எஸ்10 மாடல்களிலும் IP68 தர சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி வேரியண்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 6.7 இன்ச் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 3டி டெப்த் கேமரா, 3 ஜி.பி. ரேம் மற்றும் 4500 Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்பம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 5ஜி மாடலில் குவாட் ஹெச்.டி. பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் கேலக்ஸி எஸ்10 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அதே பிராசஸர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இதில் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க நான்கு கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மூன்று கேமரா சென்சார்கள் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்றும் நான்காவதாக 3டி டெப்த் சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. டூயல் பிக்சல் AF, f/1.9, இரண்டாவது செல்ஃபி கேமரா hQVGA ரெசல்யூஷன் வழங்கும் 3டி டெப்த் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 5ஜி மாடலில் 4500 Mah . பேட்டரி மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்காரப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo