SAMSUNG GALAXY M40 யில் சிறிய பேட்டரி தான் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

SAMSUNG GALAXY M40 யில் சிறிய பேட்டரி தான்  இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS

Galaxy M40 யில் இருக்கும் 3,500mah யின் சிறிய பேட்டரி தான்

இந்த சாதனத்தில் ஒரு 6ஜிபி ரேம் இருக்கும் என கூறப்படுகிறது.

Galaxy M40 யில் இருக்கலாம் 6.3 இன்ச் டிஸ்பிளே

சாம்சங் Glalaxy M40 ஸ்மார்ட்போன்  இந்தியாவில் ஜூன் 11 அறிமுகமாகும்  அதனை தொடர்ந்து  அறிமுகம் செய்வதற்க்கு முன்பே  கேலக்ஸி M40 ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M40 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே வழங்கப்படுவதை சாம்சங் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.
 
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2340 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ-டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

அந்த வகையில் புதிய கேலக்ஸி M40 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அமேசானில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புறம் தெளிவாக காட்சியளித்தது.

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி M40 ஸ்மார்ட்போனில் 5 எம்.பி. இரண்டாவது கேமராவும், 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 32 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி M40 டீசர் முன்னதாக அமேசானில் வெளியிடப்பட்டது.

முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் இருபது லட்சம் யூனிட்களை கடந்ததாக அந்நிறுவனம் அறிவித்தது. இதுவரை கேலக்ஸி எம் சீரிசில் கேலக்ஸி M10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo