Samsung Galaxy M30 ஸ்மார்ட்போன் 15000 விலையில் அறிமுகமாகலாம்..!

HIGHLIGHTS

புது அறிக்கையில் வந்த தகவலின் படி Galaxy M30 யின் Rs 15,000 விலையில் அறிமுகமாகும்.

Samsung Galaxy M30 ஸ்மார்ட்போன்  15000 விலையில் அறிமுகமாகலாம்..!

Samsung  அதன் Galaxy M சீரிஸ்யில்  மூன்று ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது, அதை தொடர்ந்து நிறுவனம் ஏற்கனவே  Galaxy M10 மற்றும் Galaxy M20 என்று இரண்டு  ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்துள்ளது, இப்பொழுது அதை  தொடர்ந்து Galaxy M30 பற்றி பல வதந்திகள்  வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஸ்மார்ட்போனின்  சிறப்பம்சம்  குறித்து  தகவலும்  வெளியானது., அதனை  தொடர்ந்து இப்பொழுது இந்த ஸ்மார்ட்போனை பற்றி US  யின் சான்றிதல் வெப்சைட் FCC  யில் தகவல்  வெளிவந்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MySmartPriceயின்  ரிப்போர்ட் படி FCC  டாக்யூமென்ட்டில் Samsung Galaxy M30 யை  SM-305F என்ற மாடல் நம்பருடன் கொண்டு  வரலாம் என கூறப்படுகிறது. இந்த போனில் சூப்பர் AMOLED  டிஸ்பிளே இருக்கிறது., இதனுடன் இந்த  ஸ்மார்ட்போன் பிங்கர்ப்ரின்ட்  சென்சாருடன் வரலாம் என கூறப்படுகிறது.

இதற்க்கு நடுவில் IANS அறிக்கையில் தேர்வந்துள்ளது Galaxy M30  யில் ஒரு  ட்ரிப்பில் பின் கேமரா செட்டப் கொண்டிருக்கும் மற்றும் இந்த  சாதனத்தில் 5000mAh  பேட்டரி  கொண்டிருக்கும். இந்த  ஸ்மார்ட்போன் மார்ச் ஆரம்பத்தில் அறிமுகமாகலாம், இதில்  நம் மணம்  கவரும் விஷயம் என்னவென்றால் புது அறிக்கையில் வந்த தகவலின்  படி Galaxy M30 யின்  Rs 15,000 விலையில் அறிமுகமாகும்.

லீக் ஆன  சிறப்பம்சத்தை பற்றி பேசினால், புதிய ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2220 பிக்சல் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 சிப்செட், 4 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே பிராசஸர் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

இதில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 லென்ஸ் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க 16 எம்.பி. கேமரா, F/2.0 லென்ஸ் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் புளு, பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் SM-M305F என்ற மாடல் நம்பருடன் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 மாடல்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo