கேலக்ஸி ஃபோல்டு 2 டீசர் புதிய வடிவமைப்புப்புடன் அசத்தும் சாம்சங்

கேலக்ஸி ஃபோல்டு 2 டீசர் புதிய வடிவமைப்புப்புடன்  அசத்தும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி மாதம் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை கடந்த மாதம் துவங்கியது.

இந்நிலையில் 2019 சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனம் புதுவித வடிவமைப்பு கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் சாதனம் மடிக்கப்பட்ட நிலையில், சதுரங்க வடிவமைப்பு பெறுகிறது. இதில் பன்ச்-ஹோல் ரக கேமரா வழங்கப்படும் என டீசர்களில் தெரியவந்துள்ளது.

புதிய மாடல் புளும் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.இதுபற்றி சாம்சங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்சமயம் வி்ற்பனையாகும் முதல் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு மற்றும் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்ட புதிய மடிக்கக்கூடிய மாடல்கள் அருகில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. 

கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலின் விலை முதல் தலைமுறை மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. SM-F700F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மற்றும் 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது

சாம்சங் தனது இரண்டாம் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா அல்லது கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 990 சிப்செட் அல்லது 5ஜி எக்சைனோஸ் மோடெம் 5123 வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo