இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உடன் சாம்சங் GalaxyA50 தகவல் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது..!

HIGHLIGHTS

சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போன் 2019, பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட்  சென்சார் உடன்  சாம்சங் GalaxyA50  தகவல் இன்டர்நெட்டில்  லீக் ஆகியுள்ளது..!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்  படி  சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனில் போட்டோக்கள் எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, கேலக்ஸி A7 மாடலில் வழங்கப்பட்டிருந்ததை போன்ற சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது. 

புதிய கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி ஓ அல்லது இன்ஃபினிட்டி யு நாட்ச், எக்சைனோஸ் 9610 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. ஸ்டோரேஜ் , உயர் ரக மாடலில் 6 ஜிபி. / 8 ஜி.பி. ரேம் மற்றும் 4000 Mah . பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி A50 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்சைனோஸ் 9610 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் சாம்சங்கின் ஒன் UI ., வயர்லெஸ் சார்ஜிங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் எனலாம். USB . டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனில் 4000 எம்.Mah . பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் முற்றிலும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. 

சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போன் 2019, பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile