Samsung Galaxy A20 மொபைல் போனின் முதல் விற்பனை இன்று, விலை மற்றும் சிறப்பம்சம் உள்ளே

HIGHLIGHTS

சாம்சங் கேலக்ஸி A20 ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி A20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Samsung Galaxy A20 மொபைல்  போனின் முதல் விற்பனை இன்று, விலை  மற்றும் சிறப்பம்சம் உள்ளே

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில்  சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கேலக்ஸி A 10, கேலக்ஸி A 30 மற்றும் கேலக்ஸி A50 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங் தற்பொழுது கேலக்ஸி A 20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கேலக்ஸி A20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 ஆக்டா-கோர் பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொண்டிருக்கிறது

Samsung Galaxy A20 இந்திய விலை மற்றும் விற்பனை 

சாம்சங் கேலக்ஸி A20 ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி A20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மொபைல்  நீங்கள் ப்ளூ,ப்ளாக் மற்றும் ரெட் கலரில் வாங்கலாம் இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 8 தேதி ஆனா  இன்று விற்பனைக்கு வருகிறது இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை, ஆனால்  ஆன்லைனில்  விற்பனை பற்றி தகவல் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை, ஆனால் இது நிட்சயமாக சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் ஒபேரா ஹவுஸ், பெரிய இகாமர்ஸ்  தளங்களை தவிர ரிடைலர் கடைகளில் இன்று நீங்கள் வாங்கலாம் 

சாம்சங் கேலக்ஸி A20 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 1560×720 பிக்சல் HD. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884 பிராசஸர்
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு கேமரா, f/2.2
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4,000 Mah. பேட்டரி 
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

போட்டோ எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது 123° அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo