சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போன் வெறும் 10 ஆயிரம் விலை ரேஞ்சில் அறிமுகமாகும் லீக் தகவல்.

HIGHLIGHTS

Samsung Galaxy A03 விரைவில் அறிமுகமாகும்

வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என நம்புகிறோம்

இதில் வலுவான கேமரா மற்றும் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்

Samsung Galaxy A03 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே வியட்நாமில் கடந்த டிசம்பரில் இருந்து கிடைக்கிறது, இப்போது அதே மாடல் இந்திய சந்தையில் வர வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, Samsung Galaxy A03 விலை ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது .

இதன்படி கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே, 720×1,600 பிக்சல் வசதியுடன் தரப்பட்டுள்ளது.

மேலும் இந்த போனில் UNISOC T606 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாகவும், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை 48 எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு பின்புற கேமராக்கள் தரப்படவுள்ளன. முன்பக்கத்தில் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டுகளில் வருகிறது.

தகவலின்படி, Samsung Galaxy A03 அடிப்படை 3GB RAM + 32GB ஸ்டோரேஜ்  மாடலுக்கு ரூ.10,499 முதல் தொடங்கும். டாப்-எண்ட் மாடலின் விலை 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜிர்க்கு ரூ.11,999. இவை லீக் விலைகள் என்பதால், அவை தொடங்குவதற்கு முன் மாறலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :