Samsung பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அதன் போனின் விலை அதிகரிக்கும்

HIGHLIGHTS

Samsung நிறுவனம் தனது Galaxy A-series ஸ்மார்ட்போன்களின் விலையை இந்தியாவில் அதிகரிக்கும்

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ56 ரூ,2,000 விலை உயர்வைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அதன் போனின் விலை அதிகரிக்கும்

Samsung நிறுவனம் தனது Galaxy A-series ஸ்மார்ட்போன்களின் விலையை இந்தியாவில் திங்கள்கிழமை முதல் உயர்த்த உள்ளதாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான Galaxy A-series மாடல்கள்ரூ,1000 விலை உயர்வைக் காணும், அதே நேரத்தில் கேலக்ஸி ஏ56 ரூ,2,000 விலை உயர்வைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த திருத்தத்தையோ அல்லது இந்த அதிகரிப்புக்கான காரணத்தையோ Samsung இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் உலகளாவிய எலெக்ட்ரோனிக் சப்ளை செயின் ஏற்படும் பரந்த மாற்றங்களுடன் இந்த இடமாற்றத்தின் நேரம் ஒத்துப்போகிறது.

Samsung ஏன் விலைகளை உயர்த்தக்கூடும்

இந்த விலை உயர்வுக்கு பெரும்பாலும் காரணம் மெமரி கம்போநேன்ட்ஸ் விலை அதிகரித்து வருவதே ஆகும். தற்போது மெமரி சிப்களுக்கு, குறிப்பாக HBM மற்றும் DDR5 DRAM களுக்கு உலகளாவிய பற்றாக்குறை உள்ளது, இவை AI டேட்டா மையங்களுக்கு அதிக தேவையைக் கொண்டுள்ளன. இந்த நெருக்கடி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவுகளை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:OnePlus யின் புதிய போன் இந்த தேதியில் வருது, அம்சங்கள் பத்தி தெருஞ்சிகொங்க

ஏற்கனவே பல ப்ரேண்ட்களின் விலை அதிகரித்துள்ளது

Samsung மட்டும் அதன் விலையை அதிகரிக்கவில்லை, ஏற்கனவே இங்கு பல பல ப்ரேண்ட்கள் புதியதாக ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அதன் அக்சஸ்ரிஸ் விலையை அதிகரித்துள்ளது, நாம் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 15, Poco F8 series, vivo X300 series, மற்றும் iQOO 15 போன்ற போனின் விலை அதிகமாக இருப்பதை கண்டிருப்போம்

Samsung கேலக்ஸி ஏ சீரிஸ் விலை அதிகரிப்புக்கு முன் வாங்கிடுங்க

நீங்கள் கேலக்ஸி ஏ சீரிஸ் போனை வாங்க திட்டமிட்டிருந்தால், விலை திருத்தத்திற்கு முன்பு வாங்குவது பணத்தை மிச்சப்படுத்த உதவும். புதிய விலை நிர்ணயம் தொடங்கியதும், சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அதிகரிப்பை முழுமையாக ஈடுசெய்யாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo