LPG e-KYC New Rule: இனி சப்சிடி வேணுமா பயோமெட்ரிக் அவசியம் அதை உங்கள் வீட்டில் இருந்து எப்படி செய்வது?

HIGHLIGHTS

LPG சேவைகள் மற்றும் மானியங்களைத் தொடர்ந்து பெற பயோமெட்ரிக் ஆதார் வெரிபிகேஷன்

மானியங்களைத் தொடர்ந்து பெற பயோமெட்ரிக் ஆதார் அத்தேண்டிகேஷன் அல்லது இ-KYC முடிக்க வேண்டும்

அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்கள் மூலம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேரிபிகேஷன் செய்யலாம்

LPG e-KYC New Rule: இனி சப்சிடி வேணுமா  பயோமெட்ரிக் அவசியம் அதை உங்கள் வீட்டில் இருந்து எப்படி செய்வது?

மார்ச் 15 அன்று, அனைத்து உள்நாட்டு LPG கன்ஸ்யூமர் LPG சேவைகள் மற்றும் மானியங்களைத் தொடர்ந்து பெற பயோமெட்ரிக் ஆதார் அத்தேண்டிகேஷன் அல்லது இ-KYC முடிக்க வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (Natural Gas) அமைச்சகம் அறிவித்தது. ஆதார் ஃபேஸ்ஆர்டி ஆப்புடன் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்கள் மூலம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேரிபிகேஷன் செயல்முறையை இப்போது எளிதாக முடிக்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதை பற்றி மினிஸ்ட்ரி ஆப் பெட்ரோலியம் X பக்கத்தில் அனைத்து வீட்டு LPG கன்ஸ்யூமர் பயோமெட்ரிக் ஆதார் அதேன்டிகேஷன் (e-KYC) முடிக்க வேண்டும். இப்போது உங்கள் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் மொபைல் ஆப மற்றும் ஆதார் FaceRD ஆப்பை பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருந்தபடியே சரிபார்க்கலாம்.

LPG யின் புதிய ரூல் என்ன?

புதிய உத்தரவின் கீழ், எல்பிஜி பயனர்கள் தங்கள் ஆதாரை பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் இணைத்து அங்கீகரிக்க வேண்டும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்படும் எல்பிஜி இணைப்புகளின் நுகர்வோருக்கு இந்த செயல்முறை பொருந்தும்.

இதையும் படிங்க ஒன்ப்ளஸ் ப்ரியர்யர்களுக்கு ஜாக்பாட் ஆபர் OnePlus 13 போனில் ரூ,6000 வரை டிஸ்கவுண்ட்

அதேண்டிகேஷன் செயல்முறை மிகவும் எளிதானது என்றும், எந்த LPG டிஸ்ட்ரிப்யூட்டர் பார்வையிடாமல் டிஜிட்டல் முறையில் செய்ய முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. கன்ஸ்யூமர் அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி, ஆதார் FaceRD பயன்பாட்டைப் பயன்படுத்தி முக அங்கீகாரம் மூலம் செயல்முறையை முடிக்கலாம்.

Ujjwala Scheme நன்மை என்ன?

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகளுக்கு விதிகள் சற்று கடுமையானவை. ஒவ்வொரு நிதியாண்டின் முதல் நிரப்புதலுக்கு முன்பு அவர்கள் பயோமெட்ரிக் e-KYC-ஐ முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மானியம் நிறுத்தி வைக்கப்படலாம் மற்றும் சிலிண்டர் கிடைப்பது ஒரு சிக்கலாக மாறும். இருப்பினும், ஆண்டுதோறும் e-KYC முடிந்ததும், அதே ஆண்டில் அது மீண்டும் தேவைப்படாது.

LPG பயோமெட்ரிக் ப்ரோசெசஸ் எப்படி செய்வது

  • ஸ்டேப் 1: அரசு அறிவிப்பில் வழங்கப்பட்ட QR கோடை ஸ்கேன் செய்யவும் அல்லது அதிகாரப்பூர்வ லிங்கை பார்வையிடவும்: https://www.pmuy.gov.in/e-kyc.html
  • ஸ்டேப் 2: ஆதார் ஃபேஸ்ஆர்டி ஆப்புடன் உங்கள் ஆயில் மார்கெட்டிங் நிறுவனத்தின் மொபைல் ஆப்பை (IOCL, BPCL அல்லது HPCL) டவுன்லோட் செய்யலாம் .
  • ஸ்டேப் 3: நிறுவனத்தின் ஆப்யில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, ஆதார் ஃபேஸ்ஆர்டி ஆப்பை பயன்படுத்தி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்கவும்.
  • ஸ்டேப் 4: வெர்பிகேஷன் வெற்றிகரமாக முடிந்ததும், கன்ஸ்யூமர் LPG அக்கவுன்ட் அங்கீகரிக்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile