ஐபோன் 5G போன் உற்பத்தி வேலையில் தீவிரம்.

ஐபோன் 5G  போன் உற்பத்தி வேலையில் தீவிரம்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 5ஜி ஐபோன் மாடல்களின் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இருப்பினும் , 5ஜி ஐபோன் மாடலின் உற்பத்தி பணிகள் மே மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.அந்த வகையில் 5ஜி ஐபோன் மாடல்கள் வெளியீட்டில் எவ்வித தாமதமும் இருக்காது என தெரிகிறது. ஆப்பிள் வெளியிட இருக்கும் புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்பட இருக்கிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேக் சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விநியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. எனினும், இவற்றுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு விநியோகம் மே மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் மூடப்பட்டு இருந்ததில் 80 சதவீத ஸ்டோர்கள் திறக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ஐபோன்களின் உற்பத்தி பணிகள் விரைவில் துவங்கும் என தெரிகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile