நீங்கள் ஆவலுடன் காத்து கொண்டிருந்த ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது

நீங்கள்  ஆவலுடன்  காத்து கொண்டிருந்த  ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இன்று  பிளிப்கார்டில்  விற்பனைக்கு வருகிறது
HIGHLIGHTS

ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 16,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது

சியோமி நிறுவனம்  சமீபத்தில் அதன் ரெட்மி ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து  ரெட்மி 7 ப்ரோ  முதல்  விற்பனை  மார்ச் 13 அன்று வந்தது விற்பனைக்கு வந்த சில நிமிடங்கலியே  அத்தனை ஸ்மார்ட்போன்களையும் விற்று தீர்த்தது, இதன்  காரணமாக  நிறைய வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்ததார்கள். இன்று மீண்டும்  ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில்  விற்பனைக்கு  வருகிறது Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது மிஸ் பண்ணாம இருக்க  சேலுக்கு 5 நிமிடத்திற்கு  முன்பே  தயாராக  இருந்து கொள்ளுங்கள் 

இதில் 6.3 இன்ச்  FHD பிளஸ் டிஸ்பிளே 2340×1080 பிக்செல்ஸ் தீர்மானத்தை பெற்றுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது.

ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– ஸ்பிளாஷ் ப்ரூஃப்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah . பேட்டரி
– க்விக் சார்ஜ் 

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்

ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX486, 1.25um, PDAF, f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– ஸ்பிளாஷ் ப்ரூஃப்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah  பேட்டரி
– க்விக் சார்ஜ் 4

விலை  மற்றும் ஆபர் 

ரெட்மி 7 இந்த  சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன்  மற்றொரு வகை 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. 

ரெட்மி 7ப்ரோ  இதன் விலை பற்றி பேசினால் Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மேலும் இதனுடன் பல ஆபருடன் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo