Redmi Note 8 அறிமுகத்துக்கு முன்பே முன்பதிவு தொடங்கியது

Redmi Note 8 அறிமுகத்துக்கு  முன்பே முன்பதிவு தொடங்கியது

சீனாவில் ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி நோட் 8 சீரிஸ் முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் 4500 Mah பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. டீசர் தவிர ரெட்மி நோட் 8 ப்ரோ 64 எம்.பி. கேமரா எடுத்த புகைப்படங்களையும் சியோமி அவ்வப்போது வெளியிட்டிருக்கிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் ரெட்மி நோட் 8 சீரிஸ் அதன்பின் இந்தியா உள்பட மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரெட்மி நோட் 8 சீரிஸ் ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்களின் மேம்பட்ட மாடல் ஆகும். ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் குவாட் கேமரா அமைப்பு, 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

பத்து லட்சம் முன்பதிவுகளை சியோமி தனது வெய்போ கணக்கில் தெரிவித்தது. முன்னதாக ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்கள் சர்வதேச சந்தையில் இரண்டு கோடி யூனிட்கள் விற்பனையை கடந்தது. 

சமீபத்திய டீசரின் படி ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களின் கேமிங் அக்சஸரிக்களுக்கான சப்போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இவற்றில் லிக்விட் கூலிங் மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படலாம். ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் மற்றும் 25x சூம் வசதி வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile