REDMI NOTE 8 PRO அதிரடி விலை குறைப்பு.
ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல்களின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முறையே ரூ. 15,999 மற்றும் ரூ. 17,999 விலையில் வி்ற்பனை செய்யப்படுகின்றன.
Xiaomi நிறுவனத்தின் இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரெட்மி நோட் 8 பேஸ் வேரியண்ட் விலையை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை மட்டும் தற்சமயம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரெட்மி நோட் 8 ப்ரோ பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல்களின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முறையே ரூ. 15,999 மற்றும் ரூ. 17,999 விலையில் வி்ற்பனை செய்யப்படுகின்றன.
குறைக்கப்பட்ட புதிய விலை அமேசான் இந்தியா மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மாற்றப்பட்டு விட்டது. இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக், காமா கிரீன், ஹாலோ வைட் மற்றும் எலெக்ட்ரிக் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் விலை குறைப்பு தற்காலிக அறிவிப்பா அல்லது நிரந்தரமாக விலை குறைக்கப்பட்டு இருக்கிறதா என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Redmi NOTE 8 PRO சிறப்பம்சங்கள்
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர். வசதி, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா கொண்டிருக்கிறது.
முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile