Redmi Note 8 Pro Electric ப்ளூ வேரியண்ட் ரூ. 14,999 யில் அறிமுகமானது

HIGHLIGHTS

ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Redmi Note 8 Pro  Electric ப்ளூ வேரியண்ட்  ரூ. 14,999 யில்  அறிமுகமானது

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ரெட்மி நோட் 8 காஸ்மிக் பர்ப்பிள் நிறத்தில் அறிமுகம் செய்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் விலை ரூ. 14,999 முதல் துவங்குகிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடைபெறுகிறது. புதிய எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் தவிர ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹாலோ வைட், காமா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் LCD  ஸ்கிரீன் மற்றும் HDR .வசதி வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 8 ப்ரோ இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா கொண்டிருக்கிறது.

முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile