REDMI NOTE 8 PRO மற்றும் REDMI NOTE 8 இந்தியாவில் ஓபன் சேல் ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலாம்.

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 27 Dec 2019 10:52 IST
HIGHLIGHTS
  • Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்களை அதிகாரபூர்வ ஆன்லைன் பார்ட்னர் அதாவது Amazon India மூலம் வாங்கலாம்

REDMI NOTE 8 PRO மற்றும் REDMI NOTE 8 இந்தியாவில்  ஓபன் சேல் ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலாம்.
REDMI NOTE 8 PRO மற்றும் REDMI NOTE 8 இந்தியாவில் ஓபன் சேல் ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலாம்.

Realme X2 ஓபன் சேல்க்கு பிறகு இப்பொழுது Xiaomi  அதன்  Redmi Note 8  சீரிஸ் யின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன்  ஸ்டோரில் செல்லலாம் அல்லது ஆஃப்லைன் இரண்டு சந்தையிலும் வாங்கி செல்ல முடியும்.இனிமேல் அனைவருக்கும் திறந்த கலத்தில் ரெட்மி நோட் 8 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் கிடைத்துள்ளன என்று நிறுவனத்தின் சார்பாக ஒரு ட்வீட் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் நீங்கள் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் 24x7 பெறப் போகிறீர்கள். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்த ஆண்டு அக்டோபரில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது வரை, இந்த மொபைல் போன்களை ஆன்லைன் ஊடகம் மூலமாக மட்டுமே வாங்க முடியும்.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நீங்கள்  Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்களை அதிகாரபூர்வ ஆன்லைன் பார்ட்னர் அதாவது  Amazon India மூலம்  வாங்கலாம்.இது தவிர, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் சியோமியின் அதிகாரப்பூர்வ கடை அதாவது mi.com மூலம் வாங்கலாம். இது தவிர, இந்த தொலைபேசிகளின் ஆஃப்லைன் விற்பனைக்கான தகவல்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த தொலைபேசிகளைப் பற்றி நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, மூன்லைட் வைட், காஸ்மிக் பர்ப்பிள் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ரெட்மி நோட் 8 ப்ரோவின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் பற்றி பேசினால்,, இது ரூ .15,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ .17,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

REDMI NOTE 8  மற்றும் REDMI NOTE 8 PRO சிறப்பம்சங்கள்.

 இந்த போனில் 6.5 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதன் எஸ்பெக்ட்  ரேஷியோ 19.5: 9 ஆகும். அதன் ஸ்க்ரீன் முதல் பாடி ரேஷியோ 91.4% ஆகும்.ரெட்மி நோட் 8 ப்ரோவின் Optics பற்றி பேசினால், இந்த போனில் ஒரு குவாட் கேமரா உள்ளது, இதில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போனில் செல்ஃபிக்காக 20 எம்.பி கேமரா உள்ளது, இது AI பியூட்டி மோட் , AI போர்ட்ரைட் ஷோட்ஸ் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளிட்ட பல AI அம்சங்களுடன் வந்துள்ளது.

பார்போமான்ஸ் பற்றி பேசினால், மீடியா டெக் ஹீலியோ G90T  உடன் இந்த போன்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் MIUI 10 அடிப்படையில் அண்ட்ராய்டு 10 யில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் டிசம்பரில் MIUI 11 அப்டேட்டை பெறத் தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கேமிங்கை மேம்படுத்த லிக்யூட் கூல் அமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

REDMI NOTE 8

ரெட்மி நோட் 8 இன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால்,, நிறுவனம் 6.3 இன்ச் ஃபுல் HD டிஸ்ப்ளே கொண்ட சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இந்த போன் மூன்லைட் ஒயிட், காஸ்மிக் பர்பில், ஸ்பேஸ் பிளாக் மற்றும் நெப்டியூன் ப்ளூ விருப்பங்களில்  கிடைக்கும்.நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆரா திரவ வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் போனில் பி 2 ஐ ஸ்பிளாஸ் ப்ரூஃப் பினிஷ் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவைப் பற்றி பேசினால்,, இந்த போனில் 48 மெகாபிக்சல் பறிமாறி கேமராவுடன் குவாட் கேமராவைப் வழங்குகிறது., இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல்கள், மூன்றாவது மற்றும் நான்காவது கேமராக்கள் 2 மெகாபிக்சல் லென்ஸ்கள். இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதில் செல்ஃபி எடுக்க 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது

மேலும் தொழில்நுட்பச் செய்திகள், ப்ரொடக்ட் ரிவ்யூ, அறிவியல் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அப்டேட்களுக்கு Digit.in ஐப் படிக்கவும் அல்லது எங்கள் Google செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

Advertisements

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்