ரெட்மி நோட் 7 இந்திய வெளியீடு தேதி அறிவிப்பு…!

ரெட்மி நோட் 7 இந்திய வெளியீடு தேதி  அறிவிப்பு…!
HIGHLIGHTS

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 12 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிய ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக சியோமி ஏற்கனவே தெரிவித்திருந்தது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 7 மாடலாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 12 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமான சில தினங்களில் தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. எனினும், புதிய ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்தியாவில் ரெட்மி நோட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகவில்லை என்ற அடிப்படையில் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,000 முதல் ரூ.13,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 12 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக 91மொபைல்ஸ் முதலில் தெரிவித்தது. இந்த அறிக்கையில் ல்மார்ட்போனின் அறிமுக தேதி இடம்பெற்றிருக்கும் விளம்பர படமும் இடம்பெற்றிருக்கிறது. அதன் படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் புது டெல்லியில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி ஸ்மார்ட்போனுடன் சியோமி Mi ஸ்போர்ட்ஸ் ஷூக்களும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் கடந்த ஆண்டின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக சியோமி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Redmi Note 7 சிறப்பம்சங்கள்:-

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000Mah  பேட்டரி
– க்விக் சார்ஜ் 4

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.

Redmi Note 7 பற்றி பேசினால் 4,000mAh  பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் 4குயிக்  சார்ஜ்  சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில் 43  நிமிடங்களில் 100 ஸ்வதவிதம் சார்ஜ்  ஆகிவிடும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo