உலக முழுவதும் 1.5 கோடி ரெட்மி யூனிட் ஸ்மார்ட்போனை விற்று சாதனை.

உலக முழுவதும்  1.5 கோடி  ரெட்மி யூனிட்  ஸ்மார்ட்போனை  விற்று சாதனை.

சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் பிப்ரவரி மாதத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில் சியோமி இந்தியா ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த விற்பனை சியோமியின் அதிகாரப்பூர்வ Mi வெப்சைட்டில் மற்றும் ப்ளிப்கார்ட்டில் நடைபெறுகிறது.

அந்த வகையில் சந்தையில் வெளியாகி ஆறு மாதங்களில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக நான்கு மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையானதாக சியோமி அறிவித்தது.

இதுதவிர சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கே20 சீரிஸ் விலை அதிகமாக இருக்கும் என்பதால் இது ரெட்மி நோட் 7 சீரிஸ் விற்பனையை பாதிக்காது என்றே கூறப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo