6GB ரேம் உடன் அறிமுகமாகும் Redmi Note 7 Pro ஸ்மார்ட்போன்..!

6GB ரேம் உடன் அறிமுகமாகும்  Redmi Note 7 Pro ஸ்மார்ட்போன்..!
HIGHLIGHTS

Xiaomi விரைவில் அறிமுக செய்யும் அதன் புதிய Redmi Note 7 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும், ரெட்மயோ யின் தலைவர் Lu Weibing வெப் யில் பயனர் ஒருவருக்கு ரிபலை யில் இதனை தெரிவித்துள்ளார்

Xiaomi  விரைவில் அறிமுக செய்யும் அதன் புதிய Redmi Note 7 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும், ரெட்மயோ யின் தலைவர் Lu Weibing வெப் யில் பயனர்  ஒருவருக்கு ரிபலை யில் இதனை தெரிவித்துள்ளார் இதனுடன்  இந்த ஸ்மார்ட்போனில் Redmi Note 7 Pro வில் 6GB ரேம் மற்றும் 64GB மற்றும் 128GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யும்.

இந்நிலையில், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன. ரெட்மி நோட் 7 அறிமுக விழாவிலேயே ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சாம்சங் ISOCELL GM1 சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் ரெட்மி நோட் 7 போன்றே புதிய நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் சீனாவின் வெய்போ தளத்தில் லீக் ஆனது. அதில் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார் வழங்கப்படுகிறது. 

முன்னதாக குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இத்துடன் ஆக்டா-கோர் க்ரியோ 675 சி.பி.யு. மற்றும் அட்ரினோ 612 GPU வழங்கப்படுகிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்டின் மேம்பட்ட வடிவில் 11 என்.எம். தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. 

இந்த பிராசஸரில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4 பிளஸ் தொழில்நுட்பத்திற்கான வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் அல்ட்ரா-ஹெச்.டி. (4K @ 30fps) தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. 

ரெட்மி நோட் 7 யில் ரியர் மவுண்டட் பிங்கர்ப்ரின்ட்  சென்சார் கொண்டுள்ளது. மற்றும் இது  ப்ளூ, கோல்ட், டிலைட்  ப்ளாக் கலர் ஒப்சனில்  கிடைக்கிறது. இதனுடன் இதில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனில்  Wi-Fi, ப்ளூடூத்,5.0, GPS, IR ப்ளாஸ்டர் , ஒரு  USB  டைப் c  போர்ட் 3.5mm  ஆடியோ ஜாக் போன்றவை இதில் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4,000mAh பேட்டரி  இருக்கிறது  மற்றும் இந்த ஸ்மார்ட்போனில்  விற்பனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை, இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில்  அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo