Redmi Note 13 5G சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சம் விலை பற்றி பார்க்கலாம் வாங்க

Redmi Note 13 5G சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சம் விலை பற்றி பார்க்கலாம் வாங்க
HIGHLIGHTS

Redmi Note 13 5G சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம்

இதில் Redmi Note 13 5G, Note 13 Pro 5G மற்றும் Note 13 Pro+ 5G ஆகியவை அடங்கும்.

Redmi Note 13 Pro+ 5G ஆனது MediaTek Dimensity 7200-Ultra chipset கொண்டுள்ளது

Redmi Note 13 5G சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் இதில் Redmi Note 13 5G, Note 13 Pro 5G மற்றும் Note 13 Pro+ 5G ஆகியவை அடங்கும். நிறுவனத்தின் புதிய மாடலில் 6.67 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே உள்ளது. போனில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Redmi Note 13 Pro+ 5G ஆனது MediaTek Dimensity 7200-Ultra chipset கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களின் தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Redmi Note 13 5G சீரிஸ் விலை மற்றும் விற்பனை தகவல்.

Redmi Note 13 5G யின் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999. அதேசமயம் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999 மற்றும் 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.21,999. இந்த ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் ஒயிட், ப்ரிசம் கோல்ட் மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த போனின் விற்பனை ஜனவரி 10 அன்று பகல் 12 மணிக்கு Mi.com,amazon மற்றும் ரீடைல் ஸ்டோரில் கிடைக்கும்.

Redmi Note 13 Pro 5G யின் 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 25,999 ரூபாயில் இருக்கிறது, 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.27,999 மற்றும் 12ஜிபி + 256ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.29,999. இந்த ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் ஒயிட், பவள ஊதா மற்றும் மிட்நைட் பிளாக் கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. ஜனவரி 10 அன்று பகல் 12 மணிக்கு Mi.com,flipkart மற்றும் ரீடைல் ஸ்டோரில் கிடைக்கும்

Redmi Note 13 Pro+ யின் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.31,999. 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.33,999 மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.35,999. இந்த ஸ்மார்ட்போன் Fusion Black, Fusion Purple மற்றும் Fusion White கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. ஜனவரி 10 அன்று பகல் 12 மணிக்கு Mi.com,flipkart மற்றும் ரீடைல் ஸ்டோரில் கிடைக்கும்.

Redmi Note 13 5G சிறப்பம்சம்

Redmi Note 13 5G யில் 6.67 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரேசளுசன் 1080×2400 பிக்சல் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. மற்றும் இது 1,000 nits ப்ரைட்னாஸ் இருக்கிறது

போனில் 6nm MediaTek Dimensity 6080 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Redmi Note 13 5G ஆனது 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமராவைக் கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.3, GPS, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும்.

போனில் எக்சிலோரோமீட்டார் கைரோஸ்கோப், எம்பியன்ட் லைட் சென்சார், இ-காம்பஸ் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளது. Redmi Note 13 5G ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, ஃபோனில் ஒரு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. மேலும் இந்த போனில் IP54 ரேட்டிங் உடன் வருகிறது, இது டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரேசிச்டன்ட் கொண்டுள்ளது. டைமென்சன் பற்றி பேசுகையில், போனின் நீளம் 161.11 mm நீளம் 74.95 mm திக்னஸ் 7.6 mm மற்றும் 173.5 கிராம். Redmi Note 13 5G ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 யில் வேலை செய்கிறது.

Note 13 Pro 5G மற்றும் Note 13 Pro+ 5G சிறப்பம்சம்

Redmi Note 13 Pro 5G மற்றும் Note 13 Pro+ 5G ஆகியவை 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, இது 1220×2712 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 1,800 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது.

Redmi Note 13 Pro 5G ஆனது Snapdragon 7s Gen 2 ப்ரோசசறை கொண்டுள்ளது. நோட்13 Pro+ ஆனது Dimensity 7200-Ultra SoC ப்ரோசெசர் கொண்டுள்ளது Redmi Note 13 Pro 5G மற்றும் Note 13 Pro+ 5G ஆகியவை 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இதையும் படிங்க: Vivo X100 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம், 16GB ரேம் கொண்டிருக்கும்

முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. Redmi Note 13 Pro 5G மற்றும் Note 13 Pro+ 5G ஆகியவை 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளன. கனெக்டிவிட்டி விருப்பங்களில் Wi-Fi 6 மற்றும் NFC சப்போர்ட் ஆகியவை அடங்கும். போனின் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo