இந்தியாவில் Redmi Note 11 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகமானது

HIGHLIGHTS

Redmi Note 11 Pro இன் இந்திய விலை வெளியிடப்பட்டுள்ளது

Redmi Note 11 Pro + 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளன.

Redmi Note 11 Pro இன் இந்திய விலை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20,000 விலையில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வந்துள்ளது. போனுடன், Redmi Note 11 Pro + 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சாதனங்களும் 120Hz AMOLED டிஸ்ப்ளேவைப் வழங்குகிறது, மேலும் அவை 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளன.

ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி விலை தகவல்.

மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த போனின் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆகவும் உள்ளது. இந்த போன் மார்ச் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த போன் மார்ச் 23-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

இந்த போனில் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.20,999-ஆகவும், 8 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.22,999-ஆகவும், 8ஜிபி ரேம்+256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.24,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.டி.எஃப்.சி கார் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும். இந்தபோன் வரும் மார்ச் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி சிறப்பம்சம்

ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67-inch full-HD+ AMOLED Dot டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடனும், 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடனும் வழங்கப்பட்டுள்ளது. இதில் MediaTek Helio G96 SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

கேமராவை பொறுத்தவரை இந்த போனில் 108 மெகா பிக்ஸல் f/1.9 லென்ஸ் கொண்ட சாம்சங் ஹெச்.எம்2 பிரைமர் சென்சார், f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, f/2.2 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார்,  f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.இதில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67-inch full-HD+ (1,080×2,400 pixels) AMOLED டிஸ்பிளே, 120Hz ரெப்ரெஷ்ரேட், 1,200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் octa-core Qualcomm Snapdragon 695 SoC பிராசஸர் இடம்பெற்றுள்ளது.

கேமராவை பொறுத்தவரை ப்ரோ+ 5ஜி போனில் f/1.9 லென்ஸ் கொண்ட 108 மெகாபிக்ஸல் சாம்சங் ஹெச்.எம்2 பிரைமரி சென்சார், f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடபெற்றுள்ளன. இந்த போனில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :