ஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் Redmi K30 Pro அறிமுகமானது.

ஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் Redmi K30 Pro அறிமுகமானது.

சியோமியின் ரெட்மி பிராண்டு சீன சந்தையில் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் இ3 சூப்பர் AMOLED ஸ்கிரீன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி கே30 ப்ரோ சிறப்பம்சங்கள்

– 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ E3 AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR5 ரேம்
– 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.1 மெமரி
– டூயல் சிம்
– MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, , 0.8μm, f/1.69, 7P லென்ஸ்
– 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
– 13 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
– 2 எம்.பி. டெப்த் லென்ஸ், 1.75 μm
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா 
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை ரெஸ் ஆடியோ, 1216 ஸ்பீக்கர்
– 5ஜி SA/NSA டூயல் 4டி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, GPS
– யு.எஸ்.பி. டைப் சி
– 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம் 5ஜி  SA/NSA வசதியை வழங்குகிறது. மேலும், 3435mm² VC லிக்விட் கூல்டு ஹீட் சின்க், கேம் டர்போ 3.0, 4டி வைப்ரேஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 சார்ந்த MIUI 11 இயங்குதளம் கொண்டிருக்கும் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3டி கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி IMX686 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 13 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 12 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

விலை மற்றும் விற்பனை 

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் வைட், புளூ, கிரே மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6+128 ஜி.பி. மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 32,250) என துவங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo