இப்போதைக்கு நாங்க poco F2 ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதில்லை

இப்போதைக்கு  நாங்க poco F2 ஸ்மார்ட்போனை  வெளியிடப்போவதில்லை

இணையத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான தகவல்களில் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கின் கீழ் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், போக்கோ எஃப்2 ரெட்மி கே30 ப்ரோ மாடலை விட வித்தியாசமானது என போக்கோ பிராண்டு பொது மேலாளர் சி மன்மோகன் தெரிவித்து இருக்கிறார்…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேலும் Poco F2 ஸ்மார்ட்போனை உருவாக்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக 2018 ஆண்டு வெளியிடப்பட்ட போக்கோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், லிக்விட் கூலிங் வசதியுடன் ரூ. 20,999 விலையில் வெளியிடப்பட்டது. 

கடந்த வாரம் போக்கோ பொது மேலாளர் மன்மோகன் தனது ட்விட்டரில், மக்கள் போக்கோ பிராண்டிங்கின் கீழ் எதிர்பார்க்கும் சாதனங்களை தேர்வு செய்ய கோரினார். அதில் பெரும்பாலானோர் TWS ரக இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என பதில் அளித்து இருந்தனர்.

 எனினும், இவை எதுவும் இந்திய சந்தைக்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை. அந்த வகையில் போக்கோவின் TWS இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சாதனமாக இருக்கிறது.ஏற்கனவே சியோமி நிறுவனம் TWS இயர்பட்ஸ் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் வாடிக்கையாளர்கள் விருப்பப்படி போக்கோ பிராண்டு TWS இயர்பட்ஸ் உருவாக்கி வருவதாக மன்மோகன் தெரிவித்து இருக்கிறார். விரைவில் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo