REDMI K30 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எப்போ, எங்கே வாங்க பாக்கலாம்.

REDMI K30 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எப்போ, எங்கே வாங்க பாக்கலாம்.

சியோமி நிறுவனம் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் 5ஜி சிப்செட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 4ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்2 பெயரில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

மேலும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட் வைட் மற்றும் மிஸ்ட் பர்ப்பிள் என இரண்டு வித நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 5ஜி வேரியண்ட்டில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே, குவாட் கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.

ரெட்மி கே30 5ஜி வேரியண்ட் ரெட்மி பிராண்டிங் கொண்டு இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என சிங்கிள் வேரியண்ட்டில் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

REDMI K30 5G ஸ்மார்ட்போனின்  சிறப்பம்சம் 

Redmi K30 5G  ஸ்மார்ட்போனில், கொரில்லா கிளாஸ் 5 இன் பாதுகாப்புக்கு கூடுதலாக, 6.67 இன்ச் FHD+ Hole-Punch  டிஸ்ப்ளே கிடைக்கும். 5 ஜி மாடலில், உங்களுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி ப்ரோசெசரை வழங்குகிறது . இது தவிர, உங்களுக்கு 8 ஜிபி ரேம் மற்றும் போனில் 256 ஜிபி வரை ஸ்டோரேஜை வழங்குகிறது . இருப்பினும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதில்லை 

புகைப்படம் எடுப்பதற்கான போனில் இருக்கும் கேமராவைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு இந்த போனில் குவாட்-கேமரா அமைப்பைப் வழங்குகிறது இது தவிர உங்களுக்கு இந்த போனில் 64MP பிரைமரி சென்சார் வழங்குகிறது . இந்த கேமராவுக்கு உதவ 5MP மேக்ரோ ஷூட்டர், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி வைட்-ஆங்கிள் கேமராவும் போனில் கிடைக்கின்றன. இது தவிர, உங்களுக்கு இந்த போனில் இரட்டை கேமரா செல்பி கேமராவையும் பெறுகிறீர்கள். இந்த மொபைல் போனில் , உங்களுக்கு 20MP மெயின் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்குகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo