Redmi K20 Pro வில் அதிரடியாக விலை .குறைக்கப்பட்டுள்ளது
ரெட்மி K 20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி K 20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Surveyதற்சமயம் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை தற்காலிகமாக குறைக்கப்படுகிறது. அந்த வகையில் ரெட்மி K 20ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி கே20 ப்ரோ டாப் எண்ட் மாடலான 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என மாற்றப்பட்டுள்ளது.இதுதவிர செலக்ட் செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் புதிய ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3000 வரை குறைக்கப்படுகிறது. இதுதவிர ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 8,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. 124.8° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா, ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3P லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile