அடுத்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஒரு பாப்-அப் மற்றும் நோட்ச் லெஸ் டிஸ்பிலே கொண்டிருக்கும்.
ரெட்மி யின் இந்த புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் K20 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என என ரெட்மி தலைவர் லு வெய்பிங் தெரிவித்து இருக்கிறார். K என்ற வார்த்தை கில்லர் என்பதை குறிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் ரெட்மி K20 ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் கில்லர் ஆக இருக்கும்.என அவர் தெரிவித்தார்.
Surveyமுன்னதாக ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் கொண்டிருப்பது உறுதியானது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படும் என்றும் வெய்பிங் ஏற்கனவே தெரிவித்தார்.
இத்துடன் அதிநவீன இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000Mah . பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி K20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD பிளஸ், நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, MIUI10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile