Redmi Go ஸ்மார்ட்போன் ரூ.6,500 விலையில் அறிமுகம்…!

HIGHLIGHTS

சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி கோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் இயங்கும் என தெரிகிறது

Redmi Go ஸ்மார்ட்போன் ரூ.6,500 விலையில்  அறிமுகம்…!

சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி கோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் இயங்கும் என தெரிகிறது. இதுபற்றி ரெட்மி தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன்
– குவால்காம் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
– 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா
– ஆண்ட்ராய்டு 8.1
– 3000 Mah. பேட்டரி

இந்த போனின் சிறப்பம்சங்களை பற்றி பேசினால்  ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் HD  ஸ்கிரீன், குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்படுகிறது. போட்டோக்கள் எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்டு இயங்கும் என தெரிகிறது. அந்த வகையில் ரெட்மியின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கும். சியோமி ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஒன் தளத்தில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை தவிர ரெட்மி கோ பற்றிய மற்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கும் என சியோமி பதிவிட்டிருக்கும் போட்டோவில் தெரிகிறது. ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

ஜெர்மனியை சேர்ந்த வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி ரோ ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன் படி ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

விலை 

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், வைபை, ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ. வழங்கப்படுகிறது. ஐரோப்பாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத துவக்கத்தில் விற்பனைக்கும் வரும் என்றும் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile