Redmi 9A அசத்தலான கேஸ்பேக் ஆபருடன் இன்று 12 பகல் மணிக்கு அமேசானில் விற்பனை

Redmi 9A அசத்தலான  கேஸ்பேக் ஆபருடன் இன்று 12 பகல்  மணிக்கு  அமேசானில் விற்பனை
HIGHLIGHTS

Redmi 9A இன் இந்த சேல் இன்று பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா, மி.காம் மற்றும் மி ஹோம் ஸ்டோர்ஸ் வழியாக இருக்கும்.

புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது

அமேசானில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் நோ கோஸ்ட் EMI விருப்பம் கிடைக்கிறது

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் LCD டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 5000 Mah பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி 9 ஏ இன் இந்த சேல் இன்று பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா, மி.காம் மற்றும் மி ஹோம் ஸ்டோர்ஸ் வழியாக இருக்கும்.

விலை மற்றும் விற்பனை தகவல்.

புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6799 என்றும் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விற்பனை சலுகைகளைப் பற்றி பேசுகையில், அமேசானில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் நோ கோஸ்ட் EMI விருப்பம் கிடைக்கிறது.. HSBC கேஷ்பேக் கார்டுக்கு 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடியும், ப்ரைம் மெம்பர்களுக்கான அமேசான் பே ICICI  வங்கி கிரெடிட் கார்டுக்கு 5 சதவீத தள்ளுபடியும், பிரைம் கார்டு இல்லாதவர்களுக்கு போன் வாங்குவதற்கு 3 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

Redmi 9A சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ப்ரூஃப்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி 
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

ரெட்மி 9A இன் சிறப்பம்சத்தை பற்றி பேசுகையில், போனில் 6.53 இன்ச் IPS டிஸ்ப்ளே உள்ளது மற்றும் அதன் எஸ்பெக்ட் ரேஷியோ  20: 9 ஆகும். இந்த ஃபோனுக்கு ஆரா 360 டிசைன் வழங்கப்பட்டுள்ளது மற்றும் யூனிபோடி 3 டி டிசைனுடன் வருகிறது. இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி 25 செயலியால் இயக்கப்படுகிறது மற்றும் கேமிங்கிற்கு ஹைப்பர் என்ஜின் கேம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மேலும், ஸ்டோரேஜை அதிகரிக்க பயனர்களுக்கு மைக்ரோ எஸ்டி கார்டு வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 

பேட்டரி பற்றி பேசுகையில், போனில் 5000Mah பேட்டரி உள்ளது, மேலும் இது 10W ஃபாஸ்ட் சார்ஜருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த போன் 24 மணி நேர வீடியோ கேமிங் வழங்கும் மற்றும் போனில் பி 2 ஐ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது, இது தண்ணீரிலிருந்து பாதுகாக்கிறது,

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo