Redmi 10 Power இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம்.

HIGHLIGHTS

ரெட்மி தனது இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது,

Redmi 10A மற்றும் மற்றொன்று Redmi 10 Power ஆகியவை அடங்கும்.

Redmi 10 Power உடன் 8 GB வரை ரேம் வழங்கப்படுகிறது.

இன்று அதாவது ஏப்ரல் 20 ஆம் தேதி, ரெட்மி தனது இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் ஒன்று Redmi 10A மற்றும் மற்றொன்று Redmi 10 Power ஆகியவை அடங்கும். புதிய போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 9 Power இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். ரெட்மி 10 பவர் ஸ்னாப்டிராகன் 680 செயலியுடன் 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவில் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பும் உள்ளது. Redmi 10 Power உடன் 8 GB வரை ரேம் வழங்கப்படுகிறது.

Redmi 10 Power யின் விலை

8 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 10 பவரின் 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.14,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. பவர் பிளாக் மற்றும் ஸ்போர்ட்டி ஆரஞ்சு நிறத்தில் இந்த போனை வாங்கலாம். போனின் விற்பனை தேதி குறித்து நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

Redmi 10 Power யோன் சிறப்பம்சம்.

Redmi 10 Power ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 13 ஐக் கொண்டுள்ளது. இது 6.7-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே மற்றும் 400 nits வரை பிரகாசம் கொண்டது. கொரில்லா கிளாஸ் 3 இன் பாதுகாப்பு காட்சியுடன் கிடைக்கும். இது கிராபிக்ஸிற்காக Adreno 610 GPU உடன் Snapdragon 680 செயலி, 8 GB LPDDR4x ரேம் 3 ஜிபி வரை மெய்நிகர் ரேம் அதாவது மொத்தம் 11 ஜிபி ரேம் ஆகியவற்றைப் பெறும்.

கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த ரெட்மி போனில் இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன, இதில் முதன்மை லென்ஸ் 50 மெகாபிக்சல்கள், இது துளை f/1.8 உள்ளது. இரண்டாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் f / 2.4 அப்ரட்ஜர் கொண்டது. இதில் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.

இணைப்புக்காக, Redmi 10 Power ஆனது 4G LTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, USB Type-C, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் பவர் பட்டனில் கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Redmi 10 Power ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இருப்பினும் பெட்டியில் 10W சார்ஜர் மட்டுமே கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :