ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமியின் துணை பிராண்டான ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி 10 2022, சமீபத்தில் கூகுள் ப்ளே கன்சோல் பட்டியலில் காணப்பட்டது, இது இந்தச் சாதனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதற்கான அறிகுறியாகும். நினைவுகூர, இந்த Redmi மொபைல் போன் Google Play Console பட்டியலுக்கு முன் FCC இணையதளத்தில் காணப்பட்டது. கூகுள் பிளே கன்சோல் பட்டியலிலிருந்து சில Redmi 10 2022 விவரக்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.
அதன்படி 2022 ரெட்மி 10 மாடல் இருவித ரேம் ஆப்ஷன்கள், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் அமெரிக்காவின் எப்.சி.சி. வலைதளத்திலும் இடம்பெற்று இருந்தது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 1080×2400 ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12.5 வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடல் 4ஜி.பி.+64ஜி.பி. மற்றும் 6ஜி.பி.+128ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சீரிஸ் சிப்செட், பிரைமரி கேமராவுடன் 8 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ், 2 எம்.பி. ஆம்னிவிஷன் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் 2022 ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்